ஹலோ நான் பிரியா பேசறேன்.. "நியூட்" வீடியோ வேணுமா.. அதிர வைத்த வள்ளல்.. மடக்கி பிடித்த போலீஸ்

ஆபாச மோசடி பேச்சினால் 27 வயது இளைஞர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 27 வயசு பையன்.. ஆனால் இவரிடம் இருந்ததோ அத்தனையும் கிரிமினல் புத்தி.. பெண் குரலில் பேசி 350 ஆண்களிடம் செக்ஸ் சாட் செய்து பெருமளவில் பணத்தை கொள்ளையடித்து அதிர வைத்துள்ளார் இந்த என்ஜீனியரிங் பட்டதாரி.

கடந்த 2017ம் ஆண்டிலிருந்து இந்த செயலை இவர் செய்து வந்துள்ளார். தற்போது நம் போலீஸிடம் வசமாக சிக்கிக் கொண்டு விட்டார். இந்த நபரின் பெயரைப் பார்த்தால் படு அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது வள்ளல் ராஜ்குமார் ரீகன் என்பதாகும் இவரது பெயர். சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பனகுடி. ஊருக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார் இந்த வள்ளல்.

வள்ளர் காதல் மொழி பேசி ஆண்களை ஏமாற்றுதில் பெரிய மன்னனாக இருந்துள்ளார். அதுவும் பெண் குரலில் பேசி யாருக்கும் சந்தேகமே வராத வகையில் அவர் பேசி மயக்கியதுதான் இதில் ஹைலைட்டே.

மொபைல் ஆப்

மொபைல் ஆப்

வள்ளல் செய்த சேட்டைகளின் சாராம்சம் இதுதான். லொகான்டோ என்ற ஆப் ஒன்று உள்ளது. இது வேலை தேடுவோருக்கான மொபைல் ஆப் ஆகும். இதில் பதிவு செய்து வைத்துள்ளவர்களைக் குறி வைத்து களம் இறங்கியுள்ளார் வள்ளல். இதை வைத்துத்தான் இத்தனை பேரின் பணத்தை சூறையாடியுள்ளார். இதெல்லாம் உதயராஜ் என்ற நபர் மூலமாகத்தான் வெளியுலகுக்கு தெரிய வந்தது. உதயராஜ் வேறு யாருமில்லை, வள்ளலிடம் பேசி ஏமாந்த நபர்தான். மதுரவாயலைச் சேர்ந்தவர்.

பிரியா

பிரியா

உதயராஜ் மதுரவாயல் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனக்கு பிரியா என்ற பெண் அறிமுகமானதாகவும், அவர் போன் மூலமாக தன்னுடன் பேசி தொடர்பு கொண்டதாகவும், இருவருக்கும் இடையே செக்ஸ் சாட் வரை சென்றதாகவும் கூறினார். இந்த நிலையில் திடீரென பிரியா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார். கொடுக்காவிட்டால் சாட் ரகசியத்தை வெளிப்படுத்தி மானத்தை வாங்கி விடுவேன் என்று மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார் உதயராஜ்.

செக்ஸ் சாட்

செக்ஸ் சாட்

மேலும் இதுதொடர்பாக உதயராஜ் விவரித்ததாவது.. நான் வேலைக்காக லொகான்டோ ஆப்பில் பதிவு செய்து வைத்திருந்தேன். கடந்த 16ம் தேதிதான் டவுன்லோட் செய்தேன். அப்போது அதில் செக்ஸ் சாட் செய்ய விருப்பமா என்று கேட்டு ஒரு ஸ்கிரீன் ஓபன் ஆனது. பின்னர் அந்த எண்ணிலிருந்து பிரியா என்ற பெண் பேசினார்.

டார்ச்சர்

டார்ச்சர்

பணம் கொடுத்தால் செக்ஸ் சேவைகள் கிடைக்கும் என்றார். நானும் 100 ரூபாய் பணம் அனுப்பினேன். ஒரு நிர்வாணப் படம் வந்தது. வீடியோ வேண்டும் என்றால் 1500 கட்டச் சொன்னார் பிரியா. ஆனால் நான் கொடுக்க மறுத்து நம்பரை பிளாக் பண்ணிட்டேன். சில மணி நேரம் கழித்து பிளாக் செய்த நம்பரிலிருந்து போன் வந்தது. அதில் அந்தப் பெண்ணுக்கு நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது போலவும், அது தொடர்பாக போலீஸில் கொடுத்த புகார் போலவும் ரசீது இருந்தது.

வள்ளல்

வள்ளல்

இதுதவிர வேறு சில தொலைபேசி எண்களிலிருந்தும் யார் யாரோ போன் செய்து என்னை மிரட்ட ஆரம்பித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயராஜ் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணையில் இறங்கியபோதுதான் பிரியா என்பது போலி பெயர் என்றும் ஒரிஜினர் பெயர் வள்ளல் என்றும் தெரிய வந்து அதிர்ந்து போயினர்.

புகார்கள்

புகார்கள்

வள்ளலை பிடித்து விசாரித்தபோதுதான் 2017 முதல் தான் செய்த அட்டகாசம் எல்லாவற்றையும் கக்கினார். 350க்கும் மேற்பட்ட ஆண்களை தான் ஏமாற்றி பணம் பறித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த மோசடி செயலுக்காக தமிழக காவல்துறையின் ஆன்லைன் புகார் பதிவு வசதியைப் பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட போலி புகார்களைப் பதிவு செய்து அதைக் காட்டிக் காட்டியே ஆண்களை ஏமாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

போன் நம்பர்

போன் நம்பர்

இதில் என்ன கொடுமை என்றால் வள்ளலால் பாதிக்கப்பட்ட எந்த நபரும் போலீஸில் போய் புகார் கொடுக்கவே இல்லை. உதயராஜ் மட்டும்தான் துணிச்சலுடன் போலீஸுக்கு வந்துள்ளார். இதனால்தான் வள்ளல் சிக்கியுள்ளார். தற்போது வள்ளலைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.. போன் நம்பரை வைத்து சேட்டை செய்த வள்ளல் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+