IIT Madras: தமிழக கல்வித் துறையின் சாதனை! சென்னை ஐஐடியில் படிக்க 28 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
சென்னை: சென்னை ஐஐடியில் படிக்க 28 அரசு பள்ளி மாணவர்கள் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப் பிடித்து, சாதனை படைக்கிறார்கள்.

அவ்வகையில் 'அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தின்' கீழ், நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். அந்த மாணவச் செல்வங்களுக்கு அன்பு வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
நடப்பாண்டு நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5 பேரும், சென்னையில் அரசு பள்ளி மாணவர் ஒருவரும், கோவை மாவட்டத்தில் 8 பேரும், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், மயிலாடுதுறையில் ஒருவர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் தலா 2 பேர் என 28 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்களில் 25 பேர் டேட்டா சயின்ஸ் பிரிவிலும் 3 பேர் எலக்ட்ரானிக் சிஸ்டம் பிரிவிலும் சேர்ந்துள்ளனர்.













Click it and Unblock the Notifications