சென்னையில் 2024 ஜன. 16-.18 வரை சர்வதேச புத்தக கண்காட்சி - மொழிபெயர்ப்புக்கு ரூ.3 கோடி மானியம்!
சென்னை: தமிழ்நாடு அரசின் சர்வதேச புத்தக கண்காட்சி 2024-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஜனவரியில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியுடன் சர்வதேச புத்த கண்காட்சியும் இணைந்து இடம்பெற்றிருந்தது. நடப்பாண்டில் சர்வதேச புத்தக கண்காட்சி தனித்து நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் இன்று பேசிய தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை வர்த்தக மையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும் என்றார். மேலும் மொழிபெயர்ப்புக்கான மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
#CIBF2024@tnschoolsedu pic.twitter.com/A6z4CeFhmE
— Anbil Mahesh (@Anbil_Mahesh) June 7, 2023

இது தொடர்பாக சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுத் தலைவர் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறுகையில், வரும் 2024 சர்வதேச சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றேன். சர்வதேச புத்தகக் கண்காட்சியின் கெஸ்ட் ஆஃப் ஹானர் நாடாக மலேசியா அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு செல்லும் படைப்புகளுக்காக மொழிபெயர்ப்பிற்கான மூன்று கோடி ரூபாய் மானியத்தையும் முதல்வர் அறிவித்தார். வரும் ஆண்டு சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்ற ஆண்டைபோல அல்லாமல் வழக்கமான புத்தகக் கண்காட்சியுடன் அல்லாமல் சென்னை வர்த்தக மையத்தில் தனியே நடைபெறும் என்றார்.

-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications