தமிழ்நாட்டில் வெயில் கொளுத்த போகுதாம்! எவ்வளவு டிகிரி செல்சியஸ் உயரும்? வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேநேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மே மாதம் தமிழகத்தில் வெயில் கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆய்வு மையம் தகவல்
இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மதிய வேளையில் வீடுகளை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். மாலையிலேயே வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. தற்போது மழை இல்லை. இதனால் வெயில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்,.

மிதமான மழை
வெப்பம் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளthu. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய பெருங்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

3 டிகிரி அதிகரிப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பை விட அதிகபட்சமாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இளநீர் விற்பனை
காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்துள்ள வெயிலால் குளிர்பானங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுதவிர பழச்சாறு, இளநீர், தர்பூசணி உள்ளிட்டவைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications