சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒளிர்ந்த "வானவில் மன்றம்".. காட்டூர் பாப்பாக்குறிச்சி பள்ளியில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று பெரம்பலூர், அரியலூர் செல்கிறார்

Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில், திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் 'வானவில் மன்றம்' அமைப்பை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அந்தவகையில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார்.

காலை 9.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த முதல்வருக்கு, அங்கு அவருக்கு கட்சியினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர், திருச்சி காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வந்தடைந்தார்.. அங்கு சக்கரங்களில் அறிவியல் என்ற நிகழ்ச்சியினை முதல்வர் துவக்கி வைத்தார்..

“பெஞ்ச் மார்க்” நிர்ணயிக்கும் ஸ்டாலின் அரசு.. இலவச பேருந்தால் ரூ.888 சேமிப்பு! பாராட்டிய பிடிஆர் “பெஞ்ச் மார்க்” நிர்ணயிக்கும் ஸ்டாலின் அரசு.. இலவச பேருந்தால் ரூ.888 சேமிப்பு! பாராட்டிய பிடிஆர்

மாளிகைமேடு

மாளிகைமேடு

தொடர்ந்து அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெரம்பலூருக்கு வருகை தந்து, வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். பிறகு, விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். இன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு மாலை 5.15 மணிக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

 கொல்லாபுரம்

கொல்லாபுரம்

பின்னர் அவர் அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு இரவு 7 மணிக்கு வருகிறார். இரவு உணவை முடித்து கொண்டு, அங்கு ஓய்வெடுக்கிறார். மறுநாள் காலை 9.15 மணிக்கு அரியலூர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை 9.30 மணிக்கு அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

ட்ரோன்கள்

ட்ரோன்கள்

அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காலை 10.45 மணியளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். மதியம் 12.30 மணிக்கு செல்லும் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் இந்த வருகையையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

டிரோன்கள்

டிரோன்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.. கடந்த மாதம் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை செல்வதாக இருந்தது.. ஆனால், முதல்வருக்கு ஏற்பட்ட முதுகு வலி காரணமாக, கடைசி நேரத்தில் அந்த பயணம் தவிர்க்கப்பட்டது.. இப்போது தன் சுற்றுப்பயணத்தை மீண்டும் துவங்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

 வானவில் மன்றம்

வானவில் மன்றம்

அந்தவகையில், இன்றைய தினம் திருச்சியில் காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசுப்பள்ளியில் 'வானவில் மன்றம்' அமைப்பை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல், கணித ஆய்வக வாகனங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13,200 அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வானவில் மன்றம் அமைப்பை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

English summary
3 districts tour: CM MK stalins inspection gangaikonda cholapuram trip to perambalur, ariyalur today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X