விடாத ஆ. ராசா.. ஒரே நாளில் 3 "மெகா" சம்பவம்.. பாஜகவிற்கு எகிறிய பிரஷர்.. வசமாக சிக்கிய 3 "தலைகள்"
சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 3 சம்பவங்களில் பாஜகவினர் கைதாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 4 சம்பவங்களில் பாஜகவினர் சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.
சமீபத்தில் திமுக எம்பி ஆ. ராசா இந்து மதம் குறித்தும், அதில் உள்ள வேற்றுமைகள் குறித்தும் பேசியது இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையானது. அவர் பேசுகையில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். இந்து, கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்..

இந்தவாக இருந்தால் சூத்திரன்
இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.. இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். இந்த பேச்சு பாஜகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜகவினர் ஆ. ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சில இடங்களில் போராட்டங்களையும் நடத்தினர். இந்து முன்னணி சார்பாகவும் சில இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் ஆ. ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே சட்ட ஒழுங்கை மீறி போராட்டம் செய்த, போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நேற்று தூத்துக்குடியில் ஆ. ராசா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரவோடு இரவாக இந்து முன்னணியினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். ஆனால் இவர்கள் அனுமதி வாங்காமல் போஸ்டர் ஒட்டி உள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து போஸ்டர்களை வாங்கிய கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் அதை காவல் நிலையம் எடுத்து சென்றுள்ளார். இதை தட்டிக்கேட்ட பாஜக நகர தலைவர் சீனிவாசன் காவல் நிலைய அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படுகிறது.

போஸ்டர்
ஏன் போஸ்டரை பிடிங்கினாய் என்று கூறி காவல் நிலைய அதிகாரிகளை பாஜக நகர தலைவர் சீனிவாசன் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்ட போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாஜக நகர தலைவர் சீனிவாசன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போக கள்ளக்குறிச்சியில் போலீசாரை தாக்கிய பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போஸ்டர் விவகாரம்
கள்ளக்குறிச்சியில் திமுகவிற்கு எதிராக பாஜகவினர் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த நிலையில் இடத்தில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதால், பாஜகவினருக்கும், வீட்டு உரிமையாளருக்கும் இடையில் மோதல் வந்துள்ளது. இதை பற்றி விசாரிக்க சென்ற போலீசாரை கள்ளக்குறிச்சி பாஜக நகர தலைவர் சத்யா பீர் பாட்டிலால் தாக்கி உள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரை தாக்க முயன்ற சத்யா தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

மூன்றாவது சம்பவம்
இது போக கோவில்பட்டியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியிலும் பாஜகவினர் அத்துமீறி உள்ளனர். அந்த கபடி போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்
கூட்டத்தை கட்டுப்படுத்த அவ்வப்போது கண்டிப்புடன் பேசி உள்ளார். இதை தட்டிக்கேட்ட பாஜக நிர்வாகி, அங்கேயே போலீசாரின் சட்டையை கிழித்து தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் கோவில்பட்டி நகர பாஜக தலைவர் சீனிவாசன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர் சம்பவங்கள் பாஜகவினர் இடைசெய் பிரஷரை அதிகப்படுத்தி உள்ளது.

ஆக்சன்
இப்படி 24 மணி நேரத்தில் போலீசாரை அடுத்தடுத்து தாக்கிய தமிழ்நாடு போலீசார் உடனே கைது செய்துள்ளனர். இப்படி 24 மணி நேரத்தில் பாஜக அடுத்தடுத்து சர்ச்சைகளை சந்தித்து உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோயம்புத்தூரில் உள்ள பப் ஒன்றில் அத்துமீறி செயல்பட்ட பாஜக நிர்வாகி மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்பலாக வந்து பப்பிற்குள் நுழைந்த பாஜகவினர், அங்கு இருந்த நிர்வாகிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணன், டேவிட், ஜெரிஷ் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக ஆட்சி இல்லையாம்.. "தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்!" திட்டவட்டமாக சொன்ன பாஜக தேசிய தலைவர் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
கோவை தெற்கில் இருந்து ஆரம்பிக்கும் திமுகவின் தோல்வி.. சவால் விட்ட அண்ணாமலை -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம்












Click it and Unblock the Notifications