Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தூக்குங்க" அவரை.. 3 கட்சிகள் + 3 பிளான்கள்..டெல்லிக்கு எடப்பாடி தந்த மெசேஜ்.. களமாட தயாராகும் திமுக

எடப்பாடி பழனிசாமி 3 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக மெல்ல மெல்ல சென்று கொண்டிருப்பதாக நம்பப்படும் நிலையில், 3 விதமான வியூகங்களை எடப்பாடி கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதிமுக விவகாரம் கோர்ட்டுக்கு சென்றுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்புகளை வைத்தே அக்கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில்தான் நேற்றைய சுப்ரீம்கோர்ட் உத்தரவும் பார்க்கப்படுகிறது.

அதிமுக அலுவலக சாவி வழக்கில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.. மேலும் சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என்று சொல்ல இயலாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 நறுக் + சுருக்

நறுக் + சுருக்

"ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் கிடையாது.. ஒருகட்சியின் இருதரப்பு மோதிக் கொள்கிறார்கள் என்றால் அது சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனை ஆகும். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அலுவலகத்திற்கு உரிமை கோரமுடியும்?, என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்... அதுமட்டுமல்ல, மீண்டும் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அலுவலகத்தின் சாவியை மீட்க, ஓபிஎஸ் தரப்பு சட்ட வழிகளை நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்ததுடன், அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிற்கு வழங்கியது தவறில்லை என்று குறிப்பிட்டனர்.

 சீக்ரெட் மீட்டிங்

சீக்ரெட் மீட்டிங்

சமீபகாலமாகவே, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கி வருவது, அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. மற்றொரு பக்கம், எடப்பாடி டீம் கடந்த சில நாட்களாகவே, சட்டரீதியாக நிறைய வேலை பார்த்து வந்துள்ளதாகவும், பாஜக மேலிட தலைவர்கள் சிலரை நேரடியாகவே சந்தித்து பேசியது ஓரளவு பலன் தந்து வருவதாகவும் கூறப்படுகிறது.. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. இந்த சமயத்தில்தான், எடப்பாடி பழனிசாமி திடீரென 3 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 ரத்தத்தின் ரத்தம்

ரத்தத்தின் ரத்தம்

முதலாவதாக, திடுதிடுப்பென்று அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து சென்றதுதான்.. அலுவலக சாவி எடப்பாடி கைக்கு வந்துவிட்ட நிலையிலும், நீதிமன்ற உத்தரவுகள் சாதகமாக இருந்தும்கூட, எடப்பாடி பழனிசாமி அலுவலகம் பக்கம் வராமல் இருந்த நிலையில், கடந்த 8ம் தேதி திடீரென என்ட்ரி தந்தார். இந்த திடீர் வருகை எதற்காகவென்றாலி, கடந்த 3 மாத காலமாகவே, ரத்தத்தின் ரத்தங்கள் கலக்கத்திலும் + வருத்தத்திலும் + குழப்பத்திலும் உள்ளதால், அவர்களுக்கு தெம்பூட்டுவதற்காகவே எடப்பாடி கட்சி ஆபீசுக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

 மெசேஜ்

மெசேஜ்

அதுமட்டுமல்ல, "அதிமுக தற்போதும் வலுவாகவே இருக்கிறது.. அதிலும் கட்சி, தங்களிடம்தான் இருக்கிறது, இங்கு வேறு யாருக்கும் பலமில்லை" என்பதை பாஜக, ஓபிஎஸ் தரப்புக்கு தெரிவிக்கப்பட்ட மெசேஜ் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்த வருகையானது, சோர்ந்து போயுள்ள தொண்டர்களுக்கு ஒரு எழுச்சியை, உத்வேகத்தை தருவதாக இருக்கும் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்துக்கு உடனடியாக சென்றதாக கூறப்படுகிறது..

 3 + டெக்னிக்

3 + டெக்னிக்

இரண்டாவதாக, எடப்பாடி பழனிசாமி, துணிச்சல் டெக்னிக்கை கையில் எடுத்துள்ளாராம்.. எப்போதுமே, ஒரு பிரச்சனை என்றால், டென்ஷனை முகத்தில் காட்டிவிடுவது எடப்பாடியின் வழக்கம்.. அன்றுகூட கொடநாடு விஷயம் சட்டசபையில் பேசியபோது, வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, கடுமையாக கோபப்பட்டார்.. எப்போதுமே சிரித்த முகத்துடன் பேட்டி தரும் எடப்பாடி, அன்று உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்று பேட்டி தந்ததை தமிழகமே பார்த்தது.

 கூல் எடப்பாடி

கூல் எடப்பாடி

சமீபத்தில்கூட, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு தந்த அன்றும்கூட, செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒருவித கலவரத்துடனும், பதற்றத்துடன் காணப்பட்டதை டிவிக்களில் பார்க்க முடிந்தது.. அப்போது அவர் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தபோதும்கூட, அதே பரபரப்புடன்தான் இருந்தார்.. ஆனால், இந்த டென்ஷன் எல்லாம் இப்போது போயே போச்சு.. கடந்த 15 நாட்களாகவே செம கூலாக இருக்கிறார் எடப்பாடி.. கிண்டல் செய்கிறார்.. ஜோக் அடிக்கிறார்.. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் ஒரே சிரிப்புதான். அத்துடன் அவர் தரும் பேட்டிகள் எல்லாம், யாருக்கும் தான் பயந்தவன் இல்லை என்பதை வெளிப்படுத்துவது போலவே அமைந்து வருகிறது.. இதுவும், தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தெம்பு தரும் ஒருவித யுக்தி என்கிறார்கள்.

 ஃபார்முலா

ஃபார்முலா

மூன்றாவதாக, பழைய பார்முக்கு வந்து திமுகவை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்.. இதோ மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தையும் அறிவித்துவிட்டார்.. பொதுவாக, அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, திமுகவை யார் அதிகம் எதிர்க்கிறார்களோ, அவர்களையே பிரதான தலைவராக அங்கீகரிப்பார்கள்.. அந்தவகையில், ஓபிஎஸ் கப்சிப் மோடுக்கு சென்றுவிட, எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பவரை காட்ட தொடங்கிவிட்டார்.. அத்துடன், திமுகவுக்கு பாஜகவுக்கு எதிரி இல்லை, எப்போதுமே அதிமுகதான், எதிர்க்கட்சி தலைவரான இந்த எடப்பாடி பழனிசாமிதான் என்பதையும் இதன்மூலம் தொண்டர்களுக்கு வெளிப்படுத்த முனைகிறாராம் எடப்பாடி.

 10 MLAs

10 MLAs

இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. 10 திமுக எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி சொன்னதுகூட, தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காகத்தானாம்.. அதுமட்டுமல்ல, திமுகவை எதிர்க்காவிட்டால், அதிமுக தன்னுடய எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிடும், அதன்மூலம் பாஜக அதிகாரத்தில் அமர்ந்துவிடும் என்பதையும் எடப்பாடி உணராமல் இல்லை.. ஒருபக்கம் நேரடியாக ஸ்டாலினுக்கு செக் வைத்துக் கொண்டு, மறுபக்கம் மறைமுகமாக பாஜகவுக்கு ஷாக் தர வேண்டும் என்பதன் சூட்சுமம்தான் இது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

 யார் அந்த புள்ளி

யார் அந்த புள்ளி

இப்படி திடீரென எடப்பாடியின் செல்வாக்கு கட்சிக்குள் உயர்ந்துள்ள நிலையில், இந்த நேரத்திலேயே ஓபிஎஸ் பக்கம் இருக்கும் "தென்மண்டல புள்ளி" ஒருவரை தங்கள் பக்கம் இழுக்கவும், எடப்பாடி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.. ஆக மொத்தம், 3 விதமான வியூகங்களை கையில் எடுத்து, ஓபிஎஸ் + பாஜக + திமுக என 3 கட்சிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி மெசேஜ்களை தந்து வருவது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்பதை இனிதான் பார்க்க வேண்டும்...!

தெற்கு புள்ளி

தெற்கு புள்ளி

எடப்பாடி பழனிசாமியின் அதிரடிகள் வேகமெடுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் - சசிகலா சந்திப்பு விரைவில் நடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தென்மண்டலத்தில் வெடித்துள்ளது.. இவர்கள் 2 பேரும் என்றோ சந்தித்து பேசியிருந்தால், ஓபிஎஸ் ஆதரவு ஓரளவு இந்நேரம் பெருகியிருக்கும், ஆனால், எதற்காக சந்திப்பு தள்ளிப் போய் கொண்டிருக்கிறது? என்றும் கேள்விகள் எழுகின்றன.. கட்சி தன்னிடம் வர வேண்டும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார்.. பொதுச்செயலாளரே தான் தான் என்று சசிகலா நினைப்பதால்தான், இந்த சிக்கல் வந்துள்ளதாகவும், இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து, இணங்கியும், இறங்கியும் சென்றால்தான் ஒரு முடிவு கிடைக்கும் என்றும் முக்குலத்தோர் புள்ளிகள் கூறுகிறார்கள். அந்தவகையில், இவர்களின் சந்திப்பு விரைவில் நடக்குமாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+