Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 பேர்.. ஆம்புலன்ஸில் ஜெயலலிதா.. டக்கென ஆஃப் ஆன கேமராக்கள்.. காரணமே அவர்தான்.. குபேந்திரன் பொளேர்

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து பத்திரிகையாளர் குபேந்திரன ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் ராம்மோகன்ராம் இந்த 3 பேருக்கும் அப்பல்லோவில் நடந்தது எல்லாமே அப்போது தெரிந்திருக்கும் என்று உறுதியாக சொல்கிறார் பத்திரிகையாளர் குபேந்திரன்.

ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.

சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இவர்கள் 4 பேருக்கு மட்டும் ஏன் தொடர்பு? ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி போன்றோர் பெயர் அறிக்கையில் இல்லையே? என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டியை குபேந்திரன் அளித்துள்ளார். அதில் அவர் சொன்னதாவது:

 இட்லி + சட்னி

இட்லி + சட்னி

"4 பேரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைள்ளது.. அதாவது குற்றவாளிகள் என்றால், எந்த மாதிரியான குற்றவாளிகள் என்ற கேள்வி எழுகிறது இல்லையா? அம்மா நல்லா இருக்காங்க, அம்மா இட்லி சாப்பிட்டாங்க என்று மாறி மாறி தொண்டர்களிடமும், மக்களிடம் பொய் சொல்லிவிட்டார்கள்.. இந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.. ஆனால், ஓபிஎஸ் குற்றவாளிதான்.. ஓபிஎஸ்ஸுக்கு எல்லாம் தெரியும் என்றுதான் ஆறுமுகசாமி சொல்கிறார்.. உண்மையை அவர் மறைத்திருக்கிறார்..

 ரிலீஸ்

ரிலீஸ்

ஜெயலலிதாவுக்கு பிறகு, தான்தான் இந்த கட்சி தலைவராக வரித்து கொண்டு, பதவியில் குறியாக இருந்தார் ஓபிஎஸ் என்கிறார்..
எனவே, ஓபிஎஸ் குற்றவாளிதான். இந்த அறிக்கையில் அவர் பெயர் விடுபட காரணம், ஓபிஎஸ்ஸையே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை.. "முதல்வராக இருந்த என்னையும் பார்க்க விடவில்லை" என்று ஓபனாகவே ஓபிஎஸ் சொல்லியிருந்தாரே.. ஆனால், சசிகலா அப்படி இல்லை.. ஜெயலலிதா ஜூஸ் குடித்த போட்டோவை ரிலீஸ் பண்ண சசிகலா, ஒரு ஆளுநரை பார்த்தோ அல்லது வெங்கய்யா நாயுடுவை பார்த்தோ ஏன் பேசவில்லை? அவர்களுடன் பேசி ஒரு போட்டோவை ஏன் வெளியிட முடியவில்லை?

 விஐபிக்கள்

விஐபிக்கள்

வழக்கமாக, விஐபிக்களை ஜெயலலிதா சந்தித்தால், அது தொடர்பான போட்டோக்களை ஜெயலலிதாவே டிக் செய்தால்தான் வெளிவரும்.. அதுவும் 5 நாள்தான் கழித்துதான் அந்த போட்டோவே வரும்.. அதனால், ஜெயலலிதாவை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாதுதான். ஆனால், சிகிச்சையின்போது, சசிகலா தரப்பு ஏன் ஜெயலலிதாவை பார்க்க விடவில்லை? அதற்கான பழியைதான் சசிகலா இப்போது சுமக்கிறார்.. அதிலும் அவரது ஆணவப்போக்கினால்தான் இந்த பழியை சுமக்கிறார்.. யாரையும் பார்க்க விடாமல் தடுத்ததுடன், தன் பேச்சை கேட்க கொண்டு எல்லாருமே அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவுதான் இவையெல்லாம்.

 பர்மிஷன்

பர்மிஷன்

ஒருவேளை யாரையாவது அனுமதித்திருந்தால், போட்டோ என்றைக்கோ வெளிவந்திருக்குமே.. "அம்மா விரும்பல, பார்க்காதீங்க" என்றுதான் எல்லாரிடமும் சொல்லி உள்ளார்.. பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவை, பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ, ஜனாதிபதியோ, துணை ஜனாதிபதியோ, யாரையுமே பார்க்க அனுமதிக்கவில்லையே.. இவர்கள் பார்த்திருந்தால், மக்கள் நிம்மதியாக இருந்திருப்பார்களே.. இவர்களே ஜெயலலிதாவை பார்க்கவில்லையே என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பழி பாவத்தைதான் சசிகலா இப்போது சுமந்து கொண்ட இருக்கிறார்...

சத்தியமூர்த்தி

சத்தியமூர்த்தி

ஜெயலலிதாவை பொறுத்தவரை தன் முடிவு முதல் கட்சி முடிவு வரை எல்லாமே அவரது முடிவுதான்.. அவர் விருப்பப்படிதான் அனைத்துமே நடக்கும்.. தன் உடல்நிலை பற்றி இருக்கக்கூடிய விஷயங்களை மறைக்கக்கூடிய தலைவர் ஜெயலலிதா.. ஆனால் உடல்நிலை மோசமானதும், எந்த நேரத்தில் அனுமதிக்கப்பட்டார்? ஏன் கேமரா அகற்றப்பட்டது? என எதுவுமே தெளிவாக இல்லையே.. போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் கேமராவில் இருந்து, அப்பல்லோ ஆஸ்பத்திரி கேமராக்கள் வரை அத்தனையையும் அகற்றி உள்ளனர்.. உளவுத்துறை ஐஜியாக இருந்த சத்தியமூர்த்தியின் உத்தரவில் பேரில்தான் கேமரா அகற்றப்பட்டதே தவிர, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கேமரா அகற்றப்படவில்லை..

 கசியும் உண்மை

கசியும் உண்மை

முதல்வருக்கு உடம்பு சரியில்லாமல் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்படுகிறார், இந்த விஷயத்துக்காக எதற்காக கேமராவை ஆப் செய்ய வேண்டும்? சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? சிகிச்சையிலாவது ஏதாவது ஃபாலோ செய்தார்களா.. அதுவும் இல்லை.. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.. பிறகு, டாக்டர்கள் வேண்டாம் என்கிறார்கள் என்று சொன்னார்கள்.. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமை செயலாளர் ராம்மோகன்ராம் இந்த 3 பேருக்கும் அங்கே நடப்பது எல்லாம் அப்போது தெரியும்...

ரிக்கார்ட்கள்

ரிக்கார்ட்கள்

ஆஸ்பத்திரியில் என்ன நடந்தது என்பது முழுமையாக தெரிந்திருக்கும்.. இப்போதுகூட இது தொடர்பாக ரிக்கார்டுகளை தங்கள் வீடுகளில் வைத்திருப்பார்கள்.. காரணம், என்றாவது சிக்கி கொண்டால், பதிலளிப்பதற்கு வசதியாக இந்த 3 பேரும் நிச்சயமாக டாக்குமெண்ட்கள் இருக்கும்.. விசாரணை துவங்கும்போது, நிச்சயமாக கூடுதல் தகவல்கள் வெளிவரலாம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+