இன்னும் 5 நாள்.. நெருங்கும் இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை! நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய “3 மேட்டர்”
சென்னை: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 5 நாட்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி நடைபெறுகிறது. இது தொடர்பாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 3 தகவல்களை பார்ப்போம்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தால் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றைதான்.
அதுதான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஆசிய கோப்பை
அந்த வகையில் கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், 2 வது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றியை பதிவு செய்தது.

டி20 உலகக்கோப்பை
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய அணிகள் வரும் 23 ஆம் தேதி மோதுகின்றன. இதற்கான எதிர்பார்ப்பு இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் எகிறி இருக்கிறது. இந்த நிலையில் இப்போட்டி குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய 5 தகவல்களை பார்ப்போம்.

யார் அதிக வெற்றி?
உலகக்கோப்பை டி20 தொடர்களில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகள் இதுவரை மொத்தம் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா வென்றது. அடுத்து 2012, 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணியே வென்றுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

வேகப்பந்து வீச்சு
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நல்ல எகனாமியை வைத்திருக்கும் பந்துவீச்சாளரை எடுத்துக் கொண்டால் முதலிடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஷாஹின் அஃப்ரிடி 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்து எலனாமியை 6.06 ஆக வைத்துள்ளார். அடுத்து ஸ்டார்க், ரபாடாவை தொடர்ந்து 5 வது இடத்தில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் 13 போட்டிகளில் விளையாடி 8.14 என்ற எகனாமியை வைத்துள்ளார்.

உலகக்கோப்பை
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலேயே இந்தியாவும் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெற்றிபெற்று இருக்கிறது. எந்த அணியும் இருமுறை கோப்பையை வென்றது இல்லை.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications