வாயுக் கசிவுக்குள்ளான திருவொற்றியூர் பள்ளி மீண்டும் திறப்பு! 3 மாணவிகள் மயக்கம்! இன்று விடுமுறை
சென்னை: சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவத்தை தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மேலும் 3 மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் வாக்குவாதம் செய்ததை அடுத்து இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வாயுக் கசிவு ஏற்பட்டதை அடுத்து பள்ளி மாணவர்கள் சிலருக்கு வாந்தி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

அதாவது பள்ளியில் வாயுக் கசிவு என்ற ஒரு விஷயத்தை தங்களிடம் சொல்லாமல் மாணவர்களை அவர்களாகவே வீடுகளுக்கு அனுப்பி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் பள்ளியில் நடந்த விஷயத்தை சொன்னதும் பதறியடித்துக் கொண்டு வந்தால் மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி சொல்லாமல் கொள்ளாமல் அனுப்பி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது என பெற்றோர் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அந்த மயங்கிய மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தை திமுக எம்பி கலாநிதி வீராசாமி ஆய்வு செய்தார். மேலும் எங்கிருந்த வாயு கசிவு வந்தது என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாயுக் கசிவுக்கான காரணத்தை சொல்லுமாறு கேட்டனர். அதற்கு பள்ளி நிர்வாகமோ அது குறித்து எதுவும் தெரியவில்லை என சொல்லவே பெற்றோர் கொந்தளித்துவிட்டனர்.
வாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது என்றே தெரியாத போது பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என கேட்டுக் கொண்டிருந்த நிலையில் சில மாணவிகள் தங்கள் வகுப்புக்குச் சென்றனர். அப்போது திடீரென 3 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மேலும் சிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவொற்றியூர் பள்ளிக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications