பத்ம சேஷாத்ரி ராஜகோபாலனின் பாலியல் சீண்டலுக்கு மேலும் 3 ஆசிரியர்கள் உடந்தை?.. விசாரணையில் திடுக்!
சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் கைதான பத்ம சேஷாத்ரி ராஜகோபாலனுடன் மேலும் 3 ஆசிரியர்களுக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கே கே நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக இருந்த ராஜகோபாலன் (59) பல ஆண்டுகளாக அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் வந்தன.
இந்த புகார்களை முதலில் மறுத்த ராஜகோபாலன், பின்னர் மாணவிகளுக்கு அவர் அனுப்பிய மெசேஜ் ஆதாரங்களை காட்டியவுடன் தான் செய்ததை ராஜகோபாலன் ஒப்புக்கொண்டார்.

விசாரணை
தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஆசிரியரின் பாலியல் புகார் குறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர் கீதா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

மாணவிகளிடம் விசாரணை
சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மாணவிகள் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் கீதாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

3 ஆசிரியர்கள்
ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு உடந்தையாக 3 ஆசிரியர்கள் இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாராம். எனவே அவர்கள் 3 பேரையும் அழைத்து விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ராஜகோபாலன் மீது 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

கோரிக்கை
இதனால் பத்ம சேஷாத்ரி பள்ளியில் உள்ள கருப்பு ஆடுகள் சிக்கும் என்றே தெரிகிறது. இந்தப் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரால் அந்த பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications