சென்னையில் சோகம்.. கழுத்தை இறுக்கிய மனைவியின் சேலை.. மகன் - மகளுடன் தற்கொலை செய்த நபர்! கலங்குதே
சென்னை: சென்னை திருவொற்றியூரில் 19 வயது மகள், 14 வயது மகன் ஆகியோருடன் சேர்ந்து 47 வயது நிரம்பிய ஒருவர் தனது மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி விசாரித்தபோது இந்த தற்கொலை முடிவுக்கு பின்னணியில் பெரும் சோகம் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் ஜானகியம்மாள் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 47). இவரது மனைவி பெயர் அம்சா. இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்தனர். மகள் பெயர் ரம்யா. அவருக்கு வயது 19 ஆனது. மகன் பெயர் ராஜேஷ். அவருக்கு 14 வயது ஆனது.

இந்நிலையில் தான் அம்சா முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டார். அம்சாவின் முடக்குவாதத்தை குணப்படுத்த அருள் முயன்றார். மருத்துவமனைகளுக்கு மனைவி அம்சாவை அழைத்து சென்று வந்தார் அருள். கடைசியாக ஸ்டாலின்லி அரசு மருத்துவுமனையில் அம்சா சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அம்சாவின் உடல்நலம் மோசமானது. இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இது அம்சாவின் குடும்பத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. மனைவி அம்சாவின் பிரிவால் அருள் உடைந்து போனார். அதுமட்டுமின்றி தாய் அம்சாவின் மறைவை நினைத்து மகள் ரம்யா, மகன் ராஜேஷ் ஆகியோருடன் நொந்துபோயினர்.
இந்நிலையில் தான் இன்று அருள், தனது மகள் ரம்யா, மகன் ராஜேஷ் ஆகியோருடன் வீட்டில் இறந்து கிடந்தார். 3 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர். அம்சாவின் சேலை அவர்களின் கழுத்தை இறுக்கி இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது மனைவி அம்சா மறைவால் வாடிப்போன அருள் தனது மகள் ரம்யா, மகன் ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரின் உடல்களும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் திருவொற்றியூர் ஜானகியம்மாள் கார்டன் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications