தூங்கி கொண்டிருந்த 19 வயது மகள்.. குடிவெறியில் சீரழித்த 52 வயது தந்தை.. மேலும் 2 கூட்டாளிகள் உடந்தை
பெற்ற மகளை கூட்டாளிகளுடன் சேர்ந்து நாசம் செய்துள்ளார் தந்தை
Recommended Video
சென்னை: பெற்ற மகள் என்றும் பார்க்கவில்லை.. மனநலம் பாதித்த மகள் என்றும் பார்க்கவில்லை.. தூங்கி கொண்டிருந்த 19 வயது மகளை குடிவெறியில் சீரழித்துள்ளார் தந்தை! இதைதவிர, தன்னுடைய கூட்டாளிகளையும் வீட்டுக்கு அழைத்து வந்து போதையில் நாசம் செய்துள்ளார் பெற்ற அப்பா! இப்போது 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஓட்டேரி அடுத்த நம்மாழ்வார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு 52 வயதாகிறது. இவரது மனைவி 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.

இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் சதீஷ்குமாருக்கு கல்யாணமாகி வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகளுக்கு 19 வயதாகிறது.. ஆனால், அவருக்கு மனநிலை சரியில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, செம போதையில் வீட்டுக்கு வந்துள்ளார் லோகநாதன்.. அங்கே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மகளை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த நேரத்தில் எதேச்சையாக தங்கையை பார்க்க வீட்டுக்குள் நுழைந்தார் சதீஷ்குமார்.
அப்போதுதான் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து, தந்தையை அடித்து வெளுத்து வாங்கினார்.. அங்கிருந்து விரட்டியும் விட்டார்.. உடனே தங்கையை மீட்டு, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.. பின்னர், அயனாவரம் தலைமை செயலக காலனியில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் லோகநாதன் மீது புகார் தந்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடந்தபோது, பெற்ற தகப்பன் லோகநாதன், தன்னுடைய கூட்டாளிகளான ஐய்யாவு, மணி போன்றவர்களையும் வீட்டுக்கு வரவழைத்து, பெண்ணை மது போதையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இன்று 3 பேருமே ஓட்டேரி சுடுகாட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலிலும் அடைத்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications