கூட்டணியை உடைச்சு.. 24 மணி நேரம் கூட ஆகலையே.. அடுத்தடுத்து வந்த 3 கெட்ட செய்தி.. ஆடிப்போன எடப்பாடி
சென்னை: அதிமுக பாஜக கூட்டணி முறிந்த நிலையில் தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன. இதில் அதிமுக எதிர்பார்க்காத 3 அதிர்ச்சி சம்பவங்கள் அதிமுகவிற்கு நடந்து உள்ளதாம்.
அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சம் அடைந்த நிலையில் கூட்டணி மோதலுக்கு நேற்று மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன்படி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்தது.

டெல்லியில் சமாதான பேச்சு, சென்னையில் நடந்த சமாதான பேச்சுக்கள் எல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில்தான் அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளது. முக்கியமாக அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவிற்கு வந்துள்ளார்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக நேற்று மாலை 4.45 முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் 24 மணி நேரத்தில்.. இன்று மாலை 4.45க்குள் அதிமுகவிற்கும்.. எடப்பாடி பழனிசாமிக்கு 3 முக்கியமான அதிர்ச்சி செய்திகள் சென்றுள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்காத வகையில் 3 அதிர்ச்சி செய்திகள் சென்றுள்ளதாம். அதன்படி முதலாவதாக திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் நீடிக்கிறது; எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை.

திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக என்னும் தீயசக்தியை அழித்தொழிக்க முடியும். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே அதிமுக கூட்டணிக்கு விசிக வருவதாக சிலர் ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாடு அடிப்படையில் இல்லை என்பதை புரிந்து கொண்டுள்ளோம். விசிக திமுக கூட்டணி முறிவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை, என்று விசிக கட்சி தெரிவித்துள்ளது.
இரண்டாவதாக, திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். கொள்கை ரீதியான கூட்டணி என்பதால் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். தேசிய அளவில் INDIA கூட்டணி வலுவாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியை முறித்தால் திமுகவின் கூட்டணி கட்சிகள் நம் பக்கம் வரும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார். திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும். அதேபோல் மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட சிறுபான்மையினர் கட்சிகள் வெளியேறும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் இவர்கள் எல்லாம் நம் பக்கம் வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டார். அதோடு இல்லாமல்.. ஒரு கட்டம் மேலே போய்.. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியை முறிக்க வேண்டும் என்று விசிக திருமாவளவன் கோரிக்கை விடுத்து வந்தார். அதனால் விசிக நம் பக்கம் வரும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டார்.
ஆனால் அந்த கணக்கு எல்லாம் தோல்வி அடையும் விதமாக இரண்டு திமுகவின் முக்கிய கூட்டணி கட்சிகளும் திமுகவில் இருப்பதாகவே அறிவித்துள்ளன. இன்னொரு பக்கம் 3வது கெட்ட செய்தியாக.. அதிமுக கூட்டணியில் இருந்த இமகமுக தலைவர் தேவநாதன் பாஜகவுடனும் செல்ல இருக்கிறாராம். பாஜக இருக்கும் இடத்தில் இருக்க விரும்புவதால் அவர்கள் கூட்டணிக்கு செல்ல விரும்புகிறாராம். தமிழ் மாநில காங்கிரஸ்,. ஐஜேகே ஆகியவையும் அதே கூட்டணிக்கு செல்ல விரும்புகிறதாம். கூட்டணியை முறித்த 24 மணி நேரத்தில் இப்படி அடுத்தடுத்து வந்த கெட்ட செய்திகளால் எடப்பாடி கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications