ரயில்களில் பட்டாசு எடுத்துப்போனால் ஜெயிலுதான்.. தண்டனையை பாருங்க.. ரயில்வே அதிரடி.. தீபாவளி வேற வருதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வேயில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. விரைவில் தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சூழலில், திடீர் கட்டுப்பாடுகளும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தியன் ரயில்வேயை பொறுத்தவரை, நாட்டிலேயே மிகப்பெரிய நெட்வொர்க்காக திகழ்ந்து வருகிறது.. அந்தவகையில், நாளுக்கு நாள் ரயில் சேவைகளின் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. அதனால்தான், பயணிகளின் நலன்கருதி, ரயில்வேயில் புது புது சலுகைகளும், விதவிதமான அறிவிப்புகளும் வெளியிட்ட வண்ணம் உள்ளன..

train crackers indian railway

பாதுகாப்பு: பயணிகளின் பாதுகாப்பை கருதி, ரயில்களில் சில பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்தியன் ரயில்வே தடை விதித்திருக்கிறது.. குறிப்பாக, எளிதில் தீப்பற்றக்கூடிய மதுபானம், எரிவாயு சிலிண்டர்கள், அமிலம், பெட்ரோல், டீசல், வெல்டிங்க், ஈரமான தோல்கள், உலர்ந்த புல், இலைகள், கழிவு காகிதம், இறந்த கோழி, அரிக்கும் அமிலப் பொருட்கள் போன்றவற்றை எடுத்து செல்ல கூடாது.

அப்படி எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் 1989-ன் படி, பிரிவு 67, 164, 165 ஆகிய பிரிவுகளின் அதுவும் தண்டனைக்குரிய சட்டமாகும்.. அந்தவகையில் பட்டாசுகளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது.. விரைவில் தீபாவளி பண்டிகை நெருங்க உள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே விதித்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள்: இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சொல்லும்போது, "ரயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பதில்லை. எனினும் ஒருசிலர் விதிமீறல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள்.. இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பயணிகளுக்கும் சேர்த்தே ஆபத்து விளைகிறது. எனவே, விதியை மீறி பட்டாசு கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்முறையாக பட்டாசுகளுடன் பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதி மீறல்களில் ஈடுபட்டால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்...

விழிப்புணர்வு: அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து ஆர்பிஎப் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். அத்துடன் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நவீன ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+