ரூ.10 நாணயம் வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. 10 ரூபாய் காயினில் ரிசர்வ் வங்கி அதிரடி.. இனி நிம்மதி
சென்னை: 10 ரூபாய் நாணயம் வைத்திருப்போருக்கு, மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ள நிலையில், அதை பலரும் வாங்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அறிவுறுத்துவது என்ன? தெரியுமா?
கடந்த 2009-ம் வருடம், 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்திருந்தது மத்திய ரிசர்வ் வங்கி.. இந்த நாணயத்தில் "வேற்றுமையில் ஒற்றுமை" மற்றும் "இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்" என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது நாட்டு மக்களின் கவனத்தை பெற்றிருந்தது.

இதற்கு பிறகே, புது புது டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.. எனினம், 10 ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை நீண்ட நாட்களாகவே கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம், இந்த நாணயம் குறித்த பல்வேறு வதந்திகள்தான்.
10 ரூபாய் நாணயம்: இந்த 10 ரூபாய் நாணயத்தை கடையில் யாருமே வாங்காமல் தவிர்த்துவிடுகிறார்கள்.. வணிகர்கள், வங்கிகள்கூட இந்த நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். அதனால், பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்கவும், வைத்திருக்கவும் தயக்கம் காட்ட துவங்கிவிட்டனர்.
பெரும்பாலும் பஸ்ஸில் செல்லும்போதுதான் இது தொடர்பான சிக்கலை அதிகமாக எதிர்கொள்ள நேரிடுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழும அதிகாரிகள் இது தொடர்பாக ஒருமுறை கூடி விவாதித்தனர்.. அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும், பேருந்துகளில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எனினும் முழுமையான மாற்றத்தை கொண்டுவர முடியவில்லை.
சட்டப்பூர்வமான ஒப்பந்தம்: இத்தனைக்கும் இந்த நாணயத்துக்கு, சட்டபூர்வமான ஒப்பந்தம் இருந்தாலும்கூட, பலரும் இதனை வாங்க முன்வருவதில்லை.. சில கடைகள் மற்றும் ஓட்டல்களில், "10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்" என்று நோட்டீஸ் ஒட்டிவிட்டார்கள். அதாவது, 1906ம் ஆண்டின் இந்திய நாணயச் சட்டத்தின் அடிப்படையிலானது, இது நாணயத்தை ஏற்றுக்கொள்வது கட்டாயம் ஆக்கப்படுவது என்பதாகும்.
தமிழ்நாடு என்றில்லை, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இப்படித்தான் சிக்கல் நீடிக்கிறது.. கடைக்காரர்கள் இந்த நாணயங்களை ஏற்காததால், ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்கள் வரை சென்றிருக்கின்றன.. எனவே, இந்த நாணயங்களை வாங்க மறுப்பதற்கான வழக்குகள் அதிகமாகவே பதிவாகி கொண்டிருக்கின்றன.
விழிப்புணர்வு: அதனால்தான், 10 ரூபாய் நாணயங்களை கடைக்காரர்கள், வங்கிகளில் வாங்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வுகளையும் அதிகமாக ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை பொதுமக்களே முன்வைத்து வருகிறார்கள்.. இந்நிலையில், இப்படிப்பட்ட சூழலில்தான், பொதுமக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயங்களை தைரியமாக பயன்படுத்தலாம் என்று ஆர்பிஐ தெரிவித்திருக்கிறது..
இந்த அறிவிப்பானது, மிகுந்த மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு தந்து வருகிறது.. 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று ஏற்கனவே உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆர்பிஐ மீண்டும் 10 ரூபாய் நாணயங்கள் விவகாரத்தில் தலையிட்டிருப்பது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications