11 இல்லையாமே.. ஓபிஎஸ்ஸுக்கு இத்தனை பேரா?.. வைத்திலிங்கம் சொன்ன புது கணக்கு!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸுக்கு மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இல்லை என யார் சொன்னது என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டம் , செயற்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது திடீரென ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானது.
கடந்த 7 நாட்களாக ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வரும் பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து தனித்தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி தரப்பு தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.

பிளானை முறியடிக்க திட்டம்
ஆனால் இதை முறியடிக்க ஓ பன்னீர் செல்வம் தரப்பு முயற்சித்து வந்தது. இந்த நிலையில் பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க பன்னீர் செல்வம் தரப்பு முயற்சித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி பொதுக் குழு நடைபெறும் என எடப்பாடி தரப்பு தெரிவித்தது.

ஒற்றைத் தலைமை
இந்த ஒற்றைத் தலைமை குறித்து பேச்சு எழுந்ததிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளவே இல்லை. தற்போது முதல்முறையாக ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை பன்னீர் ஆதரவாளர் வைத்திலிங்கம் படித்து காட்டினார்.

தியாகம் செய்தவர்கள்
அதில் , பொதுக் குழுக் கூட்டத்திற்கு கட்சிக்கு தியாகம் செய்த முன்னாள் மூத்த நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளராக அழைக்கவில்லை என்றும் இடம் பற்றாக்குறை காரணமாக இந்த மரபு மாற்றப்படுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.

சிறப்பு அழைப்பாளர்கள்
பொதுக் குழுவில் காலம்காலமாக மூத்த நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது என்பது நடந்து வருகிறது. மேலும் தற்போதுள்ள சூழலில் அதிமுக பொதுக் குழுவை ஒத்திவைக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வைத்திலிங்கத்திடம் ஓபிஎஸ்ஸுக்கு மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு இல்லையே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

30 பேர் ஆதரவு?
அதற்கு வைத்திலிங்கம் , அங்க பாருங்கள் அங்க உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் தான். 15 மாவட்டச் செயலாளர்கள் நேரடி ஆதரவு உள்ளது. 15 மாவட்டச் செயலாளர்கள் நடுநிலையாக உள்ளனர். எனவே 30 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications