வடசென்னையை ஓவர் டேக் செய்த தென் சென்னை.. பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு.. 30 கர்ப்பிணிகளும் பாதிப்பு
சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுள் 30 பேர் கர்ப்பிணிகள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் நேற்று 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 40 ஆனது.
நேற்று சென்னையில் மட்டும் 350-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை கொரோனாவால் 3043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு
சென்னையில் திருவொற்றியூரில் 45 பேருக்கும், மணலியில் 19 பேருக்கும், மாதவரத்தில் 35 பேருக்கும் தண்டையார்பேட்டையில் 207 பேருக்கும், ராயபுரத்தில் 490 பேருக்கும், திருவிக நகரில் 477 பேருக்கும் அம்பத்தூரில் 164 பேருக்கும், அண்ணாநகரில் 233 பேருக்கும், தேனாம்பேட்டையில் 343 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 546 பேருக்கும், வளசரவாக்கத்தில் 256 பேருக்கும், ஆலந்தூரில் 19 பேருக்கும் அடையாறில் 140 பேருக்கும் பெருங்குடியில் 32 பேருக்கும் சோளிங்கநல்லூரில் 25 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

30 கர்ப்பிணிகள்
சென்னையில் மண்டலங்கள் 4, 5, 6, 7, 8,9, 10, 11 ஆகியவை மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன. வடசென்னை பகுதிகளில் அதிக அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 30 பேர் கர்ப்பிணிகள் ஆவர். சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் தமிழகத்தில் 1700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

அதிர்ச்சி
சென்னையில் இதுவரை கொரோனாவால் 24 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 3000 பேரில் 390 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2617 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

கொரோனா
கோயம்பேடு மார்க்கெட்டும் கொரோனா நோய் பரப்பும் மையமாக மாறியுள்ளது. இங்கு பணியாற்றிவிட்டு சொந்த மாவட்டங்களுக்கு சென்றதால் அரியலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனாவால் 60-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications