தைல மரக்காட்டில் உடம்பு.. தண்டவாளத்தில் தலை.. விடிகாலையில் நடந்த பயங்கரம்.. பழிக்குபழி.. சென்னை ஷாக்
ரவுடியை பயங்கரமாக வெட்டி கொன்ற நபர்களை தேடி வருகிறார்கள்
சென்னை: தைல மரக்காட்டில் உடலும், தண்டவாளத்தில் தலையும் கிடந்தது.. இவ்வளவு பயங்கரமான கொலையை யார் செய்தது என்று தெரியவில்லை.. சென்னை அருகே ரவுடி கொலையின் அதிர்ச்சியும் இன்னும் விலகவில்லை.
சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது ஆத்துப்பக்கம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மாதவன் 30 வயதாகிறது.
இவர் ஒரு மோசமான ரவுடி.. கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன.. கொலை, கொள்ளை, வழிப்பறி என எல்லா கேஸும் பதிவாகி இருக்கிறது.

மாதவன்
இவர் ஒன்றரை வருஷத்துக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷனில் அடுத்தடுத்து 3 பேரை வெட்டி கொன்றுவிட்டார்.. இது சம்பந்தமாக 11 பேர் கைதாகினர்.. அதில் மாதவனும் ஒருவர்.. ஜெயிலுக்கும் போனார்.. ஜாமீனிலும் வந்தார். பிறகு மறுபடியும், காராமணிமேடு பகுதியில் ஒருவரை அடித்து கொன்றுவிட்டார்.. மறுபடியும் ஜெயிலுக்கு போய்விட்டு, ஜாமீனில் வந்தார்.

போலீசார்
இந்நிலையில், நேற்று இவரை யாரோ கொன்றுவிட்டனர்.. கும்மிடிப்பூண்டி ரயில்வே ஸ்டேஷனில் இவரது தலை மட்டும் கிடந்தது.. இதை பார்த்து அதிர்ந்த பொதுமக்கள், உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. அதன்பேரில், போலீசாரும் விரைந்து வந்து, தலையை மீட்டனர்.. பிறகு அவரது உடல் எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்தனர்.. அந்த சமயத்தில்தான் கும்மிடிப்பூண்டியில் ஒரு தைல மரக்காட்டில் ஒரு சடலம் கிடப்பதாக தகவல் வரவும் அங்கு விரைந்தனர்.

மதுபாட்டில்கள்
கை, கால், உடல் என அனைத்துமே தனித்தனியாக வெட்டப்பட்டு சடலம் கிடந்தது.. தலை இல்லை.. இதைடுத்து, அது மாதவன்தான் என உறுதியானது.. சடலத்துக்கு பக்கத்திலேயே மதுபாட்டில்கள் விழுந்து கிடந்தன.. பிரியாணி பொட்டலங்களும் கிடந்தன.. அந்த உடல் பாகங்களையும் போலீசார் மீட்டு கொண்டு, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
இப்போது, இதற்கு பிறகு விசாரணை ஆரம்பமானது.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, மாதவன் பைக்கில் சென்று கொண்டிருப்பது மட்டும் பதிவாகியுள்ளது... ஆனால் யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? முன்விரோதமா? பெண் விவகாரமா? பழிவாங்கும் போக்கா? எந்த கொலைக்காக இந்த பழிவாங்கல்? என்பது எல்லாம் இனிமேல் தெரியவரும்.

தனிப்படை
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது... ஆனால் இந்த கொலையை ரொம்ப சாவகாசமாக செய்துள்ளனர்.. தண்ணி அடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுவிட்டு, உடலை வெட்டி கூறாக்கிவிட்டு, தலையை மட்டும் எடுத்து கொண்டு போய் தண்டவாளத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமான விசாரணை துரிதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications