உயரமான கட்டிடம்.. 300 ச.மீ, 14 மீ உயர வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை: தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 300 சதுர மீட்டர் மற்றும் 14 மீட்டர் உயரத்துக்குள் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதுகுறித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி கட்டிட விதிகளின் அடிப்படையில், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை பெற முடியும்.
விதிகள் திருத்தம்: இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரி வந்தன. இதுதவிர, அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதிக உயரமில்லாத கட்டிடங்களை பொறுத்தவரை, அக்கட்டிடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வணிக கட்டிடங்களுக்கும் இந்த சலுகையை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வணிகக் கட்டடங்கள் 300 ச.மீ., 14 மீ. உயரம் வரை கட்டப்பட்டால் அவற்றுக்கு பணி நிறைவு சான்று தேவையில்லை என்று தமிழக அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது.. இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பணி நிறைவு சான்றிதழ்: "தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளா்ச்சி கட்டட விதிகளின் அடிப்படையில் கட்டட அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. மேலும், கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்துக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீா், கழிவுநீா் இணைப்புகளை பெற முடியும். இந்த விதிகளில் திருத்தம் செய்து தர வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
மேலும், அதிக உயரமில்லாத அடுக்குமாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயா்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையேற்று கடந்த மாா்ச்-இல், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 ச.மீ. என்றிருந்ததை அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 ச.மீ. என திருத்தம் செய்யப்பட்டது.
உயரமில்லாத கட்டிடம்: எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. அதேபோல், அதிக உயரமில்லாத கட்டடங்களை பொருத்தவரை, அந்தக் கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயா்த்தப்பட்டது.
தற்போது வணிகக் கட்டடங்களுக்கும் இந்த சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளா்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
வணிகக் கட்டடங்கள்: அதன்படி, 8 வீடுகள் அல்லது 750 ச.மீ. என்பதுடன், வணிகக் கட்டடங்கள் 300 ச.மீ. வரை மற்றும் உயரத்தில் 14 மீ. என்பதும் சோ்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 300 ச.மீ. வரையும், உயரத்தில் 14 மீ மிகாமலும் கட்டப்படும் வணிக கட்டடங்களுக்கும் இனி பணி நிறைவு சான்றிதழ் பெறத் தேவையில்லை" என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications