கனமழையால் நிரம்பிய ஏரிகள் - செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்கனமழை பெய்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இரண்டு நாட்கள் இடைவிடாமல் பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ள நீர் சூழ்ந்தது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஏற்கனவே கடந்த மாதம் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்றும் கனமழை கொட்டியதால் இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,200 கன அடி வரை தண்ணீர் வந்தது. இதனையடுத்து ஏரிகளில் இருந்து 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏரிக்குவரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கன அடி. தற்போது 3426 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்தம் உள்ள 24 அடியில் 23.18 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. இதேபோல் புழல் ஏரியில் இருந்து ஆரம்பத்தில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் 1500 கன அடி வரை உயர்த்தப்பட்டது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி ஏரியில் 881 மி.கன அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 406 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications