தமிழகம்..32 ஆண்டுகளுக்கு முன் சிதைந்த தந்தை உடல்..ராஜீவ் படுகொலை இரவு..சென்னையில் பிரியங்கா உருக்கம்
சென்னை: திமுக மகளிர் அணி நடத்திய மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தந்தை ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்ட அந்த இரவின் துயரத்தை நினைவூட்டி தமது பேச்சை தொடங்கினார்.
சென்னையில் திமுக மகளிர் அணியினர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாட்டை இன்று நடத்தினர். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் சோனியாவும் பிரியங்காவும் தமிழ்நாட்டில் ஒரே நிகழ்வில் பங்கேற்றனர். பிரியங்கா தமிழ்நாட்டில் பேசும் முதலாவது பிரம்மாண்ட அரசியல் மேடை இது. இந்த நிகழ்ச்சியில் தமது பேச்சை தொடங்கும் போது தமிழ்நாட்டின் ஶ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி இரவு தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட தருணங்களை நினைவூட்டியபடி உருக்கமாகவும் துயரத்துடனுடம் பிரியங்கா சுட்டிக்காட்டினார்.
பிரியங்கா தமது உரையை தொடங்கும் போது, 32 ஆண்டுகளுக்கு முன்பு, என் வாழ்வின் இருண்ட இரவில், நான் முதன்முதலில் தமிழக மண்ணில் கால் வைத்தேன். நான் என் தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க வந்தேன். சில மணி நேரங்களுக்கு முன் தான், என் தந்தை கொல்லப்பட்டு இருந்தார்.
நானும் என் அம்மாவும் விமானத்தின் படிக்கட்டுகளில் இறங்கும்போது, பெண்கள் கூட்டம் எங்களைச் சூழ்ந்துகொண்டு என் அம்மாவை தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டது. எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இடையே விளக்கவோ அழிக்கவோ முடியாத ஒரு பிணைப்பை அது ஏற்படுத்தி இருந்தது என்றார். அத்துடன் "நீங்கள் தான் என் தாய் நீங்கள் தான் என் சகோதரிகள்" என தமிழிலும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் பேசிய பிரியங்கா காந்தி, ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த சக்தியை வெளிப்படுத்துவதற்கும், அதை செயல் படுத்தவும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள், அதைச் செயல்படுத்துவதற்கு அவள் சுதந்திரமாக இருக்க வேண்டும். நீங்கள் மனிதகுலத்தின் சாராம்சம்.
இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் சகோதரியின் திறனை நீங்கள் ஆழமாகப் புரிந்துகொண்டால் மட்டுமே அதைச் செயல் படுத்த இயலும். ஒருவரையொருவர் கை பிடித்து, ஒன்றுபட்டு, உதவி செய்து ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக உயர்ந்து நிற்கும் பெரும் மதிப்பை பெற முடியும் என்றார்.

-
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications