குடியரசுத் தினம் அன்று கூட.. விடாத இலங்கை.. 33 ராமேஸ்வரம் மீனவர்கள்.. ஒரே இரவில் இலங்கை படையால் கைது
சென்னை: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒரே இரவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரவு 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். குடியரசு தினமான இன்று அதிகாலை மீண்டும் 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய பெருங்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மீண்டும் தொடர்கதையாகி இருக்கிறது. சில நாட்களாக அமைதியாக இருந்த இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்ய தொடங்கி உள்ளது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீனவர்களின் வலைகள் மற்றும் படகுகளையும் கடற்படை அபகரித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இன்று இலங்கையில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்கள்.
இந்திய பெருங்கடலில் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களிடம் மீண்டும் அத்துமீற தொடங்கி உள்ளனர். முக்கியமாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும், அவர்களின் படகுகளை திரும்பி தர மறுப்பதும் அதிகரித்து வருகிறது.
இலங்கை அரசால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 365 மீன் பிடி படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிவிட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
நடவடிக்கை இல்லை: இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசும் இதில் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. சமீபத்தில்தான் , நாகை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் . ஒரு படகில் சென்ற 8 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 33 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒரே இரவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இரவு 18 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். குடியரசு தினமான இன்று அதிகாலை மீண்டும் 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறைப்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை உடனே விடுவிக்க வேண்டும். இது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டு மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்தது. தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழக மீனவர்கள் 16 பேரையும் அவர்களது 2 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்தது இலங்கை கடற்படை
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications