கொரோனாவுக்கு தனி மருத்துவமனை.. நாளை ரெடியாகிவிடும்.. ஓமந்தூரார் மருத்துவமனையில்.. அமைச்சர்
சென்னை: கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் விதமாக நாளைக்குள் தனி மருத்துவமனை தயாராகிவிடும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா நோய் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதே தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருந்தது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் தனிவார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
|
தனி மருத்துவமனை
அதுபோல் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துவிட்டது. இதையடுத்து நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் சென்னையில் கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி மருத்துவமனை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

தனி வார்டு
அதன்படி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக தனி மருத்துவமனை நாளை தயாராகிவிடும்.

சிகிச்சை
இதில் 350 படுக்கைகள் கொண்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தேவைப்படின் கொரோனா பாதித்த நோயாளிகளை இங்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார். நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் மதுரையைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்லாமலேயே கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை
இதனால் சமூக பரவலான 3ஆவது நிலையை நோக்கி தமிழகம் கடந்து விட்டதோ என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசே பாராட்டும் வகையில் தமிழக சுகாதாரத் துறை பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை செய்து வந்த போதிலும் மதுரை விவகாரம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications