கூடுதல் கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பஸ்கள்.. ரூ. 38 லட்சம் அபராதம் விதித்த.. தமிழக போக்குவரத்து கழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் லாக்டவுனுக்கு முன் வீடு திரும்பிய பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மே 10-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன், அத்தியவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்து சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுக்க பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். தமிழகத்தில் தங்கி இருந்த பிற மாநில மக்களுக்கு பேருந்துகள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு சென்றனர்.

கூட்டம்

கூட்டம்

இதற்காக கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தனியார் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 304 தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம்

அபராதம்

மொத்தமாக இந்த பேருந்துகளிடம் 38,12,990 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மே 8-10 வரை இயங்கிய 304 பேருந்துகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 25 பேருந்துகள் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கட்டணம்

கட்டணம்

முக்கியமாக வெளிமாநில தொழிலார்களிடம் இப்படி அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் கூடுதல் பயணிகளை விதியை மீறி ஏற்றிக்கொண்டு சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், சில ஆம்னி பேருந்துகள் இந்த விதிமுறைகளை மீறி உள்ளன.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேராசை காரணமாக இவர்கள் கூடுதல் கட்டணங்களை விதிக்கிறார்கள். அரசுக்கும் இது தொடர்பாக புகார் சென்றுள்ளது. இதுபோன்ற தவறுகள் நடக்கமாக் ஆம்னி பேருந்து நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும், என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+