₹4,00,00,00,000.. எடப்பாடிக்கு செம ஹேப்பி.. "சும்மா இல்லீங்க".. திமுகவை விட குஷி.. காரணமே வேற போலயே
சென்னை: அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில் திமுக கூட்டணி பயங்கர குஷியில் காணப்படுகிறது.. ஆனால், அதைவிட பயங்கர குஷியில் அதிமுக உள்ளதாம்.. என்ன காரணம் தெரியுமா?
நேற்றைய தினம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டன.. முதல் ரவுண்டிலேயே காங்கிரஸ் வேட்பாளர் முன்னணிக்கு வந்துவிட்டார்.. 3வது ரவுண்டு எண்ண ஆரம்பிக்கும்போதே அதிமுக நிர்வாகிகள் பூத்தில் ஒருவரும் காணப்படவில்லை.
அபார வெற்றி பெற்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. இதற்கு முன்பு இப்படி ஒரு வெற்றியை காங்கிரஸ் வேட்பாளர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்..

தென்னரசு
அதிமுக வேட்பாளர் தென்னரசு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.. முதலில், இவருக்கு பதில் முதலியார் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சீட் தரலாமா என்ற ஆலோசனையில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டு, அதற்கு பிறகு அந்த முடிவை கைவிட்டு, இறுதியில் தென்னரசுவையே வேட்பாளராக அறிவித்தது.. இதற்கு காரணம், தென்னரசுவுக்கு ஏற்கனவே இந்த தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளதாலும், தேர்தல் அனுபவம் பெற்றிருப்பதாலும் வாக்குகள் பிரதானமாக வரும் என்று நம்பப்பட்டது.. அதுமட்டுமல்ல, பெரும் செல்வாக்கு பெற்ற தென்னரசு, சுயேச்சையாக நின்றால் கூட 10 ஆயிரம் வாக்குகள் அவருக்கு உறுதி என்றெல்லாம்கூட சொல்லப்பட்டன.

ஏங்க வர்றீங்க
அந்த அளவுக்கு தொகுதி மக்களிடம் இத்தனை காலமும் நெருங்கியே வந்துள்ளார் தென்னரசு என்றார்கள்.. ஆனால், தொகுதிக்குள் தென்னரசு அவர் வாக்கு கேட்டு சென்றபோதே, சில அதிருப்திகள் கிளம்பின.. எதிர்ப்புகள் கிளம்பின..மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த வியாபாரிகள், தென்னரசுவை முற்றுகையிட்டனர்.. "எம்எல்ஏவாக இருந்தபோது நீங்க எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல, வீரப்பன்சத்திரம் பகுதி கமலா நகரில் தென்னரசுக்காக வாக்கு சேகரிக்க அதிமுகவினர் சென்றுள்ளனர்..

சீனியர் தென்னரசு
அப்போது, பெண் வாக்காளர்கள் தென்னரசுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்... இந்த விஷயமெல்லாம் எடப்பாடியின் காதுகளுக்கு சென்று அவர் சற்று டென்ஷன் ஆகிவிட்டதாகவும் சொன்னார்கள். இந்நிலையில் நேற்றைய தினம் ரிசல்ட்டில், அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது.. இந்த தோல்விக்கு காரணம், திமுகவின் பணபலம்தான் என்று அதிமுக தரப்பில் பேட்டிகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது திமுகவை சரமாரியாக சாடினார்.. ஜனநாயகத்துக்கு பேராபத்து வந்துவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்..

ஆடுகளும் மாடுகளும்
எடப்பாடி பழனிசசாமி பேசும்போது, "30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தாங்கள் கடந்த 21 மாத ஆட்சியில் சம்பாதித்த பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்து ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர்... தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை... ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் திமுகவுக்கு பதில் அதிமுகதான் வெற்றி பெற்றிருக்கும். தினமும் காலை மக்களை ஆடு, மாடுகளை அடைத்து வைப்பது போல பட்டிக்கும், சுற்றுலாவுக்கும் அழைத்து செல்வதால் வாக்காளர்களை எங்களால் பார்க்க முடியவில்லை. மக்களை நேரில் பார்த்தால்தானே வாக்கு கேட்க முடியும்? இது ஒரு அதிசயமான தேர்தல்" என்று கூறியிருந்தார்.

தோல்விகரமான வெற்றி
இப்படி தோல்விக்கான காரணத்தை எடப்பாடி அடுக்கினால், ஜெயக்குமாரோ இதுவே எங்களுக்கு தோல்விகரமான வெற்றிதான் என்று சொன்னார்.. செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக இதுக்கு முன்னாடி வேறு எந்த தேர்தலிலும் எங்களை பார்த்து பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. ஆளும் அரசின் பணம் பாதளம் வரை பாய்ந்துள்ளது. இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களைப் பொறுத்த வரையில் இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றியாளர்களே தவிர, திமுக கிடையாது என்று ஒரே போடாக போட்டார்.

கூடாரம் குஷி
கிட்டத்தட்ட இதுபோலவேதான் எடப்பாடி பழனிசாமியும் உணருகிறாராம்.. காரணம், தொகுதியில் திமுக தரப்பு நடத்திய கவனிப்புகளையும், ஸ்வீட்பாக்ஸ்களையும் பார்த்துவிட்டு, கலங்கியே போனாராம்.. போற போக்கை பார்த்தால், அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்கிறதே கஷ்டம் போலிருக்கே என்றெல்லாம் தனக்கு கிடைத்த ரிப்போர்ட்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. அதுபோலவே, சென்னையில் இருக்கிறவர்கள் நடத்திய கருத்து கணிப்பிலும் சொல்லப்பட்டதாம்.. இதையெல்லாம் கேள்விப்பட்டு, கலவரமாகி போனதாம் அதிமுக கூடாரம்.. ஒருவேளை, டெபாசிட் போனால், அதற்கு ஓபிஎஸ்ஸும் உரிமை கொண்டாடுவாரே என்றும் பயந்தாராம் எடப்பாடியார்.

சக்சஸ் சக்சஸ்
ஆனால், டெபாசிட் வாங்கியாகிவிட்டது.. தென்னரசுக்கு 44 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் கிடைக்கும் என்று அதிமுகவினரே கணிக்கவில்லையாம்.. அவர்களுக்கே இது ஆச்சரியம்தானாம்.. கவுரவமான தோல்வியை தழுவியது சற்று நிம்மதியை தந்துள்ளதாம்.. இதுவே நமக்கு சக்ஸஸ்தான் என்கிறாராம் எடப்பாடி.. "இந்த பழனிசாமி நிறுத்துற வேட்பாளரை ஜெயிக்கணும்னா 400 கோடி அவங்க செலவு பண்ணியாகணும்.. அப்படிச் செலவு பண்ணினாத்தான் ஜெயிக்க முடியும் என்கிற நிலைமையை இன்னிக்கு நாம் உருவாக்கி இருக்கோமே.. அதுவே வெற்றிதான் என்று தன்னுடைய நிர்வாகிகளிடமும், ஆதரவாளர்களிடமும் பூரித்து சொல்லி கொண்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி..!!

சுயேட்சை
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தல் தோல்வியையடுத்து, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தமிழக பாஜக இனி முயற்சிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது.. நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, "2024ல் நடைபெறும் எம்பி தேர்தல்தான் எங்களுக்கான தேர்தல்.. அதுக்காக காத்திருக்கிறோம். அதிமுகவில் பிரிந்து நிற்கக்கூடாது.. சின்னத்தில் நிற்க வேண்டுமா? சுயேட்சையாக நிற்க வேண்டுமா? என்று தேர்தல் தேதி அறிவித்தவுடன் ஒரு குழப்பம் இருக்கத்தான் செய்தது.

முக்கோண இடி
பலமாக ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டும். கட்சி சின்னத்தில் நிற்கவேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். அப்போது எங்கள் மீது பலர் (எடப்பாடி டீம்) கோபம் அடைந்தார்கள். எந்தளவுக்கு பலமாக நிற்க வேண்டும் என்பதை இந்த தேர்தல் உணர்த்தி உள்ளது.. பாஜகவின் மகிமை திருமாவளவனுக்கு தெரியவில்லை... இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும், அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடரும்" என்று கூறியிருந்தார்... ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்நோக்கியே ஓபிஎஸ்ஸூம், டிடிவியும், சசிகலாவும் காத்துள்ள நிலையில், இதே முயற்சியை தமிழக பாஜகவும் மேற்கொள்ள நேர்ந்தால், அதை எடப்பாடி டீம் எப்படி எதிர்கொள்ள போகிறது? என்ற எதிர்பார்ப்பும் கூடிவருகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்...!!!
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications