சிறப்பு பேருந்துகளில் அள்ளும் கூட்டம்.. பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளதால் பேருந்துகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், சிறப்பு பேருந்துகள் மூலமாக கடந்த இரண்டு நாள்களில் 7,513 பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை, கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளியூர் மற்றும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வந்து இங்கு வசித்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வது வழக்கம்.

அந்த வகையில், வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படுவதும் வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணியாற்றி வருபவர்கள், கல்வி பயில்பவர்கள் என பலரும் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் வகையிலும், எவ்வித சிரமமின்றியும் பயணிக்கும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் வழக்கமாக 2,092 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 1,314 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் சுமார் 1.8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
அதேபோல, ஜனவரி 11 ஆம் தேதியான சனிக்கிழமையும் 2,092 வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,015 சிறப்பு பேருந்துகள் என 4,107 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளில் 2.2 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 7,513 சிறப்புப் பேருந்துகளில் 4.13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் விவரங்கள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண் மற்றும் 044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications