4 ஏடிஜிபிக்கள் அதிரடி இடமாற்றம்.. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான 3 ஏடிஜிபிக்கள் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு ஏடிஜிபிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியிடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்துள்ளது. அதோடு ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழ்நாடு அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார். அதன்படி பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஏடிஜிபிக்களின் விபரம் வருமாறு:

* தமிழ்நாடு சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக அபய் குமார் சிங் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அபய் குமார் சிங் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் இயக்குநராக பணியாற்றி வந்த கந்தசாமி பணி ஓய்வு பெற்ற நிலையில் இந்த பொறுப்பு காலியாக இருந்தது. இந்நிலையில் தான் அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மேலும் சென்னையில் தமிழ்நாடு போலீசின் தலைமையகத்தில் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கடராமன், சிபிசிஐடி பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அதேபோல் சென்னையில் Operations ஏடிஜிபியாக செயல்பட்டு வந்த பால நாக தேவி, சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் தலையைகத்தின் நிர்வாக பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தலைமையகத்தின் ஏடிஜிபி பணியையும் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
* மேலும் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராமுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர் ஆயுதப்படை ஏடிஜிபியாக செயல்படும் அதேவேளையில் கூடுதல் பொறுப்பாக ஆபரேஷன் பிரிவு ஏடிஜிபி பணியையும் கவனிக்க உள்ளார் என கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications