"பவரை காட்டணும்".. கடைசி வரை இறங்கி வராத ஆர்.என் ரவி.. ஸ்டாலினின் அடுத்த "மெகா" மூவ்.. 4 கேள்விகள்!
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் அவசர தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் தமிழ்நாடு அரசும் முதல்வர் ஸ்டாலினும் இதற்கு எப்படி பதிலடி கொடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம் என்பது மிகப்பெரிய உயிர்கொல்லி விஷயமாக உள்ளது. ஆன்லைன் ரம்மி காரணமாக பலர் பலியாகிவிட்டனர்.பல கோடிகளை இழந்து மக்கள் உயிரை விடும் அவலம், தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நம் நாட்டில்தான் உள்ளது.
ஆனாலும் இதற்கு எதிரான வலுவான தடை சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. முக்கியமாக கொண்டு வரப்பட்ட தடை சட்டங்களுக்கு எதிராக ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் ஒன்று கோர்ட்டுக்கு செல்கிறது. அல்லது அந்த தடை சட்டங்களையே ஆளுநர்கள் டெல்லிக்கு அனுப்பாமல் நிராகரிக்கிறார்கள்.
இப்படி பணத்தை இழந்த பலர் தமிழ்நாட்டில் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர், பேராசிரியர் என்று படித்தவர்கள், படிக்காதவர்கள் பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி காரணமாக நிறைய பேர் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். முதலில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை வெல்லும் மக்கள், பின்னர் அதில் நிறைய தொகையை வெல்லலாம் என்று நம்பி தங்கள் சேமிப்பு தொகை, வருமானத்தை எல்லாம் இழக்கிறார்கள்.

தடை சட்டம்
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற ரம்மி கேம்களை தடை செய்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அவசர சட்டம்
இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன்பின் சட்டசபையில் அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை கொண்டு வந்தால் தனியார் நிறுவனங்கள் கண்டிப்பாக கோர்ட்டுக்கு செல்லும். அப்படி செல்லும் வகையில் இருக்க கூடாது. கோர்டுக்கு போனாலும் வலுவாக இருக்க வேண்டும். கோர்டில் சட்டம் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் இதை உருவாக்கி உள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு அதன்பின் அவசர சட்டசமாக கொண்டு வரப்பட்டு பின்னர் சட்டசபையிலும் இது நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர்
இந்த நிலையில்தான் தற்போது இந்த சட்டம் காலாவதி ஆகி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ரவி கடிதம் எழுதி இருந்தார். இதில் உள்ள சட்டங்கள் தொடர்பாக அவர் விளக்கம் கேட்டு உள்ளார். ஆளுநர் தரப்பிலிருந்து கேட்கப்பட்டு உள்ள கேள்விகளுக்கு உடனே தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் கேட்ட விளக்கம் என்னென்ன என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

ரம்மி தடை
இதற்கு தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு விளக்கம் அளித்தும் ஆளுநர் இதை முறையாக டெல்லிக்கு அனுப்பவில்லை. அவரின் இந்த செயல் காரணமாக, ரம்மி தடை சட்டம் தற்போது காலாவதி ஆகி உள்ளது. ஆளுநர் சமீபத்தில் கேரளாவில் பேசுகையில் ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல. ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. பவர் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவர் தனது பவரை காட்டும் விதமாக இந்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு. அதன்பின் விளக்கம் வந்தும் அதை டெல்லிக்கு அனுப்பாமல் ஒரு சட்டத்தையே முடக்கி இருக்கிறார் என்கிறார்கள்.

தமிழ்நாடு ரியாக்சன்
மக்கள் இடையே இந்த விவகாரம் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. உயிர் தொடர்பான விஷயம் என்பதால் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன ரியாக்சன் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1 ஆளுநருக்கு எதிரான போராட்டங்கள். 2. ஆளுநரை சந்தித்து பேசுவது. 3. மீண்டும் சட்டத்தை கொண்டு வருவது. 4 சட்ட போராட்டம் செய்வது உள்ளிட்ட 4 விஷயங்களில் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுக்க வாய்ப்பு உள்ளது. அது என்ன முன்னெடுப்பாக இருக்கும் என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications