தமிழகத்தில் இன்று 482 பேருக்கு கொரோனா பாதிப்பு... நால்வர் உயிரிழப்பு
சென்னை: இன்று தமிழகத்தில் 482 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 490 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார துறை அறிவித்துள்ளது.
Recommended Video

தமிழகத்தில் இன்று புதிதாக 482 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,53,449 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்போது மாநில முழுவதும் 3,978 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நான்கு பேர் இன்று உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேர் சென்னையை சேர்ந்தவர்கள், மற்றொருவர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இன்று தலைநகர் சென்னையில் 189 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் 167 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்து கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையே 48 மற்றும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 50,706 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1,76,81,361 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications