வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.. சென்னை மணலியில் சோகம்
சென்னை: சென்னையை அடுத்த மணலி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணலியை அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் உடையார். இவரது மனைவி சந்தானலட்சுமி. இவர்களது பேத்திகள் பிரியதரிதா, சங்கீதா, பவித்ரா ஆகிய சிறுமிகளாவர்.

இவரது வீட்டில் இன்று அதிகாலை பலத்த சப்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது சிலிண்டர் வெடித்து சந்தான லட்சுமியும், 3 சிறுமிகளும் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.
இதையடுத்து அங்கு மயக்கமடைந்த நிலையில் இருந்த உடையாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த மாதவரம் பால் பண்ணை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்தது எப்படி என்பது குறித்து உடையாரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டரை இரவு மூடாமல் விட்டுவிட்டனரா, இல்லை இது தற்கொலை முயற்சியா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டு சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications