பக்கா ஸ்கெட்ச்.. ஒரே புள்ளியில் இணையும் “4 சம்பவம்”! மாநகரம் பட பாணியில் அமித்ஷாவின் “ஆபரேசன் சவுத்”

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதற்கான வேலையை தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியாவை அமித்ஷா அறிவித்ததில் இருந்தே 6 மாநிலங்களிலும் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் முழு வீச்சாக இறங்கியுள்ளனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த நிலையில் அடுத்தடுத்து அரங்கேறி இருக்கும் 4 முக்கிய சம்பவங்கள் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்துக்காக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

சம்பவம் 1: ரஜினி

சம்பவம் 1: ரஜினி

75 வது சுதந்திர தின விழா தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவில் இடம்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்ற கையோடு தமிழ்நாடு வந்து ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். இதுகுறித்து பேசிய ரஜினி "ஆளுநர் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அதிகம் நேசிக்கிறார். இங்குள்ள மக்களின் ஆன்மீக உணர்வு அவரை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நன்மை செய்ய தயாராக உள்ளதாக அவர் சொன்னார்." ஆளுநரிடம் அரசியல் பற்றி விவாதித்ததாக கூறிய ரஜினி, ஜிஎஸ்டி வரி உயர்வு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "நோ கமெண்ட்ஸ்" என்று கூறி நகர்ந்தார்.

சம்பவம் 2: தமிழருவி மணியன்

சம்பவம் 2: தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கம் என்ற கட்சியை நடத்திய வந்த தமிழருவி மணியன் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்பட்டு வந்தார். ரஜினிகாந்தும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியல் அறிவிப்பையும் வெளியிட்டார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ரஜினிகாந்த் திடீரென அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்த பின்னர் தமிழருவி மணியனும் அரசியல் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் தனது கட்சியின் பெயரை காமராஜர் மக்கள் இயக்கம் என்று மாற்றிய அவர், புதிய நிர்வாகிகளை நியமித்து அரசியலில் மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார்.

 சம்பவம் 3: அர்ஜுன மூர்த்தி

சம்பவம் 3: அர்ஜுன மூர்த்தி

பாஜகவின் அறிவுசார் பிரிவில் இருந்துவந்த அர்ஜுன மூர்த்தியை, தான் தொடங்குவதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் நியமித்தார். இதனால் அர்ஜுன மூர்த்தியை விடுவிப்பதாக அறிவித்தது பாஜக. அதன் பின்னர் கட்சி தொடங்கும் முடிவை ரஜினிகாந்த் கைவிட்டதால், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார் அர்ஜுன மூர்த்தி. அதன் பின்னர் பொதுவெளிக்கு வாரமல் இருந்த அர்ஜுன மூர்த்தி நேற்று மீண்டும் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

சம்பவம் 4: ஜூனியர் என்.டி.ஆர்.

சம்பவம் 4: ஜூனியர் என்.டி.ஆர்.

ஐதராபாத்தில் 2 நாட்களுக்கு முன்பாக பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமா ராவின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான RRR திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு ரசிகர்களை பெற்றுத் தந்தது. இந்த படத்தின் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பை கண்டு வியந்த அமித்ஷா அவரை நேரில் சந்திக்க விரும்பியதாக பாஜக தரப்பில் கூறப்பட்டாலும், அவரை கட்சியில் இணைக்கவே சந்தித்ததாக செய்திகள் கசிந்தன. ஆனால், ஜூனியர் என்.டி.ஆர். அரசியலில் இணைய விருப்பமில்லை என்று அமித்ஷாவிடம் தெரிவித்துவிட்டாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+