உஷார்! பணத்தை இழக்காதீங்க! கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய 4 முக்கிய இடங்கள் இதுதான்
சென்னை: பணம் இன்றி கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் கிரெடிட் கார்ட்டை 4 முக்கிய இடங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் நம்மில் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். கையிலும், வங்கி கணக்கிலும் பணம் இல்லாமல் இருந்தாலும் கூட கிரெடிட் கார்டை பயன்படுத்தி நமக்கு தேவையானவற்றை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

குறிப்பாக கொரோனா பரவல் காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது. தற்போது கொரோனா காலம் முடிந்தாலும் கூட கிரெடிட் கார்டு பயன்பாட்டை பலரும் கைவிடவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்களின் நிதி தேவைகள் தான்.
குறிப்பாக மிடில் கிளாஸ் வகுப்பை சேர்ந்த இளைஞர்கள், குடும்ப தலைவர், தலைவிகள் தங்களின் நிதி பற்றாக்குறையின்போது கிரெடிட் கார்டு பயன்படுத்திவிட்டு அடுத்த மாதம் கிரெடிட் கார்டு பில் கட்டும் வழக்கத்தை கொண்டுள்ளனர். அப்போது சர்வீஸ் சார்ஜ், ப்ராசசிங் பீஸ், வட்டி தொகையுடன் கட்ட வேண்டிய சூழல் உள்ளது.
இதற்கிடையே பல கிரெடிட் கார்டுகள் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு சர்வீஸ் சார்ஜ் பிடிக்காமல் சலுகைகளை வழங்கி வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளை நாம் அன்றாடம் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட தொகை சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் நம்மிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் 4 முக்கிய இடங்களில் கிரெடிட் கார்டு பயன்பாட்டை நாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பெட்ரோல், டீசல் நிலையங்கள். பெட்ரோல், டீசல் நிரப்பும் வகையில் பல கிரெடிட் கார்டுகள் சலுகைகள் தருகின்றன. இருப்பினும் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நாம் நமது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது 1 சதவீதம் வரை கூடுதல் சர்வீஸ் சார்ஜூம் ஜிஎஸ்டியும் பிடிக்கப்படுகிறது. இதனால் நமக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருப்பது ரயில் டிக்கெட் முன்பதிவாகும். இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் பலரும் நீண்டதூர பயணத்துக்கு ரயிலை தேர்ந்தெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இந்த ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் சில கிரெடிட் கார்டுகளை தவிர்த்து பல கார்டுகளை நாம் பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் கட்டணத்துடன் 2 சதவீதம் வரை சர்வீஸ் சார்ஜ் கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
இந்த பட்டியலில் 3வது இடத்தில் கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதாகும். அதாவது நமது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அவசர தேவைக்காக பணம் எடுக்கும்போது ‛ப்ராசசிங்' கட்டணமாக குறிப்பிட்ட தொகை எடுக்கப்படுகிறது. இதனை முடிந்தவரை கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பதை நாம் கைவிட வேண்டும்.
இதில் 4வது இடத்தில் இன்சூரன்ஸ் உள்ளது. அதாவது நாம் நமக்கும், நமது குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்சூரன்ஸ் (காப்பீடு) செய்திருப்போம். இத்தகைய காப்பீட்டு திட்டத்துக்கான தவணை தொகையை முடிந்தவரை நாம் பணமாக செலுத்துவதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும். மாறாக காப்பீட்டு தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்போது கூடுதலாக சர்வீஸ் சார்ஜ் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் மேற்கூறிய இந்த 4 இடங்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு முன்பு யோசித்து செயல்படுவது நல்லது. இந்த 4 விஷயங்களுக்கும் உங்களின் கிரெடிட் கார்டுகளுக்கு ஏதேனும் சலுகைகள் இருந்தால் பரவாயில்லை. மாறாக சலுகைகள் இல்லாதபட்சத்தில் மேற்கூறிய விஷயங்களுக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications