பொங்கல் பரிசு இருக்கட்டும்.. முத்து முத்தாக.. 4 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்.. குஷி செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு முக்கியமான சில அறிவிப்புகளை, நலத்திட்டங்களை அறிவித்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட உள்ளது.

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட உள்ளது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசியலாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா இல்லை, பெரிதாக பேரிடர் இல்லை என்ற போதிலும் 1000 ரூபாய் வழங்கப்படுவது கவனம் பெற்றுள்ளது. பொங்கல் பரிசு பொருட்களை எப்படி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எப்படி வழங்க வேண்டும்

எப்படி வழங்க வேண்டும்

மஞ்சள் பையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்னொரு பக்கம் ஜன.12 ஆம் தேதிக்குள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இரண்டு 500 ரூபாய் தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும். ரூ 1000த்தை சில்லறை மாற்றி வழங்கக் கூடாது என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல்

பொங்கல்

இந்த நிலையில்தான் பொங்கலை முன்னிட்டு இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்து உள்ளார். அதன்படி பொங்கல் கருணை கொடையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார். அந்த அறிவிப்பில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும் ஏற்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

கோவில்

கோவில்

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் இந்த அரசு தீர்க்கமாக இருக்கிறது. கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கான நிதியையும் ஒதுக்கி வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அறிவிப்பு 1 - தற்போது ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோருக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. இவர்களுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் கொடுக்கப்பட்டு வந்தது.

உயர்வு

உயர்வு

அதை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி இருக்கிறோம். அறிவிப்பு 2 -அதேபோல் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் 3000 என்ற அளவில் வழங்கப்பட்டு வந்தது. அதை தற்போது 4 ஆயிரமாக உயர்த்தி இருக்கிறோம். அறிவிப்பு 3 - முடி காணிக்கை செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதனால் இனிமேல் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக பணம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு இணை புத்தாடைகள் கோவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி உயர்வு

அறிவிப்பு 4- அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிரந்தர பணியாளர்கள் அகவிலைப்படியை 34% விழுக்காட்டில் இருந்து 38 விழுக்காடாக உயர்த்தி உத்தரவிடுகிறோம். இதனால் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். அரசுக்கு இதனால் கூடுதலாக 7 கோடி ரூபாய் செலவு வருடம் முழுக்க ஏற்படும் என்றாலும், இந்த திட்டத்தை அறிவிக்கிறோம். அறிவிப்பு 5 - திருக்கோயில்களில் பணியாற்றும் முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு பொங்கல் கருணை கொடை 2000 ரூபாக்குபோல் இருந்து ரூபாய் 3000 என்ற அளவிற்கு உயர்த்தப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 1.5 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ஆனாலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு பொங்கலை முன்னிட்டு அறிவிக்கிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+