கேபினட் மாற்றம் மட்டுமா.. மொத்தமாக 4 விஷயம் மாறுது.. தமிழ்நாடு அரசியலை புரட்டி போட போகும் சம்பவம்
சென்னை: தமிழ்நாடு அரசியலை மாற்ற போகும் 4 பெரிய சம்பங்கள் லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்கலாம் என்று தமிழக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
சம்பவம் 1: லோக்சபா தேர்தல் முடிவிற்கு பின்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் பேசிய கட்சி நிர்வாகிகள், தினமும் 17, 18 மணி நேரம் உழைக்கிறீர்கள். தேவையான அளவுக்கு ஓய்வெடுக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதல்ல தம்பி. கடினமான பொறுப்புகளை உதயாவிடம் பகிர்ந்துகொடுக்கலாம். அவருக்கும் நிர்வாகம் சார்ந்த விவகாரங்களை கையாள தெரிவது அவசியம். கடந்த 1 வருடமாக உதயாவின் நடவடிக்கைகளை கவனிக்கிறோம்.
நிறைய மெச்சூரிட்டி தெரிகிறது: நிர்வாகத்தில் நிறைய மெச்சூரிட்டி தெரிகிறது. மிக மிக முக்கிய விசயங்களை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றதை அவர் கவனிக்கிற மாதிரி உயர் பொறுப்பினை கொடுக்கலாம் என்று மூத்த நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தியதை ஆமோதிக்கிற மாதிரி, எனக்கு அந்த யோசனை இருக்கு அண்ணே. துணை முதல்வராக்கி நிர்வாகத்தை அதிகாரப்பூர்வமாக கவனிக்கச் சொல்லலாமா ன்னு தோணுது என்று இன்னும் சில மூத்த தலைவர்கள் ஸ்டாலினிடம் பேசி உள்ளனர்.
ஜூன் 4ம் தேதிக்கு பின்பாக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை மனதில் வைத்து இந்த மாற்றங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் 2: லோக்சபா தேர்தலோடு சில அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் பற்றிய புகார்கள் மேலிடத்திற்கு சென்றுள்ளது. அதாவது 3 அமைச்சர்கள் சரியாக வேலை செய்யவில்லை. தங்கள் தொகுதி, பொறுப்பு மாவட்டங்களில் பணிகளை செய்யவில்லை என்று புகார் சென்றுள்ளதாம். முக்கியமாக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் பெரிதாக சில அமைச்சர்கள் பணிகளை செய்யவில்லை.
இந்த முறை பெரிதாக எங்கும் பணம் கொடுக்கப்படவில்லை. இதை ஒரு முன்னோட்டமாக திமுக செய்துள்ளது. இதன் பலன் எப்படி இருக்கும் என்று ஆய்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்ததும்.. எந்த இடங்களில் எல்லாம் வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் அமைச்சர்களை விசாரிக்கும் முடிவில் தலைமை இறங்கி உள்ளதாம். எப்படியும் 40 இடங்களில் வெற்றி உறுதி. ஆனால் வித்தியாசம் குறைவாக உள்ள இடங்களில் வேலை பார்த்த அமைச்சர்களுக்கு சிக்கல் வரலாம் என்கிறார்கள். இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கலாம் என்கிறார்கள்.
சம்பவம் 3: தமிழ்நாட்டை சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவர் லோக்சபா தேர்தல் முடிந்ததும் கட்சி தாவ உள்ளார். தனது மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி பிற மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு வேறு கட்சிக்கு செல்லும் திட்டத்தில் உள்ளாராம். முக்கியமான பொறுப்பில் உள்ள அவர் கட்சியை உடைத்துக்கொண்டு செல்லும் முடிவில் உள்ளாராம். இதனால் சில கசப்பான விஷயங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் கூட.. மேலிடத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று இவர் கட்சியை விட்டு செல்லும்.. அல்லது கட்சியை மொத்தமாக உடைக்கும் முடிவிற்கு வந்துவிட்டார் என்கிறார்கள்.
கட்சி தலைமை மீது அப்செட் காரணமாக அவர் கட்சி மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேல்மட்ட நிர்வாகிகளோ அவர் செல்வது ஓகே.. ஆனால் கட்சியை எல்லாம் உடைக்க முடியாது. பல நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கு மேல் ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
சம்பவம் 4: அதிமுகவில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் வரலாம் என்கிறார்கள். அதிமுக தோல்வி அடையும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பிரஷர் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த சென்னை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்,. தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகளின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அதிமுகவில் நிர்வாகிகள் பெரும்பாலானோருக்கு தலைமை மீது விசுவாசம் இல்லை என்றும் அதிமுக நிர்வாகிகள் பலரும் மக்களவை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றுவதற்கு பதிலாக கடமைக்கு பணியாற்றினார்கள் என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிமுக தோல்வி அடையும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அது பிரஷராக மாறும்.. சசிகலாவிற்கு வாய்ப்பாக மாறும் சூழல் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications