இலங்கை கடற்படையால் மேலும் 4 தமிழக மீனவர்கள் கைது- அடுத்தடுத்து 40 பேர் சிறைபிடிப்பு
சென்னை: இலங்கை கடற்படையால் மேலும் 4 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை அண்மையில் 36 தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தது. 36 தமிழக மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், மீனவர் இயக்கங்கள் வலியுறுத்தின.
இதனையடுத்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தமிழக மீனவர்கள் 36 பேரையும் உடனே விடுதலை செய்ய இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் 40 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 36 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கோரி அப்பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 5-வது நாளக இன்றும் நீடிக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications