சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் பனிமூட்டம்! ஸ்ரீபெரும்புதூர் அருகே 4 வாகனங்கள் மோதல்! 5 பேர் காயம்
சென்னை: சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகி 5 பேர் காயமடைந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக மழை இல்லாவிட்டாலும் பனிமூட்டம் இருக்கிறது. பகல் பொழுதிலேயே குளிர் இருக்கிறது. இந்த நிலையில் புறநகர் பகுதிகள், காலி இடங்களில் பனிமூட்டமாக இருக்கிறது. இதனால் வாகனங்கள் முன்பகுதியில் உள்ள விளக்குகளை எறியவிட்டபடி வருகிறது.

அந்த வகையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாகவும் முகப்பு விளக்குகளை எறியவிட்டபடியும் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது ஸ்ரீபெரும்புதூர் பென்னலூரில் சாலையை கடக்க முயன்ற குதிரை மீது கார் மோதியது.
இதையடுத்து 2 தொழிற்சாலைகளின் பேருந்து, காலி மதுபாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்டன. இதனால் 5 பேர் காயமடைந்தனர். கார் மோதியதில் குதிரை பலியாகிவிட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் விடை பெற்றது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2 நாட்களாக தென்கிழக்கு தீபகற்பத்தில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லை. வட இந்திய பகுதிகளில் வறண்ட காற்று வீசுகிறது.
இத்தகைய காரணங்களல் வடகிழக்கு பருவமழையானது கேரளம்- மாஹே, தெற்கு உள் கர்நாடகம், தமிழகம்- புதுவை- காரைக்கால், ராயல்சீமா, ஆந்திராவை ஒட்டிய கடலோர பகுதிகள் மற்றும் ஏனாம் பகுதிகளில் 27ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விடை பெற்றது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆங்காங்கே பனிப்பொழிவு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் அதிகாலை வேளையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications