பாத்ரூம் பக்கெட்டில் பிணமான ஷன்மதி.. கொலை செய்த குடும்பத்தினர் மிரட்டுவதாக சிறுமியின் தந்தை புகார்
மகளை கொலை செய்த ராணுவ வீரர் குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: 4 வயசு குழந்தை ஷன்மதியை நாசம் செய்து பாத்ரூம் பக்கெட்டில் பிணமாக போட்ட முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர், ஷன்மதியின் குடும்பத்துக்கு தொடர்ந்து மிரட்டல் தருகிறார்களாம்!
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அந்தோணி நகரை சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - செந்தமிழ் செல்வி. இவர்களது 4 வயது குழந்தைதான் ஷன்மதி. செந்தமிழ்செல்வி வெளியே சென்றிருந்த சமயம், பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாட்சி சுந்தரம் என்பவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
விளையாடலாம் வா என்று தன் வீட்டு பெட்ரூமில் வைத்து பாலியல் அக்கிரமத்தை செய்துள்ளார். இதில் அந்த பிஞ்சு அங்கேயே இறந்துவிட்டது. இதையடுத்து, குழந்தையை ஒரு சாக்கு பையில் கட்டி, தமிழ்செல்வி வீட்டு பாத்ரூம் பக்கெட்டில் போட்டு ஓடிவிட்டார்.

பினாயில் வாடை
எதுவுமே தெரியாததுபோல, அவரும் மற்றவர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடினார். போலீசில் புகார் அளிக்க போனால், இவரும் கூடவே சென்றிருக்கிறார். இருந்தாலும் நம்ம போலீஸ் விடுமா என்ன.. பக்கத்து வீட்டுக்காரர் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளே சென்று பார்த்தால், அவரது பெட்டில் குழந்தையின் உடைந்த கம்மல், தலைமுடி கிடந்தது. அதேபோல மீனாட்சி சுந்தரத்தின் உடையிலும் ரத்தக்கறை இருந்தது. அவரது வீட்டின் பாத்ரூமில் பினாயில் வாடையும் வந்தது.

கணவன்-மனைவி
தங்கள் பாணியில் போலீசார் விசாரிக்கவும் கடைசியில் ஒப்புக் கொண்டார் மீனாட்சி சுந்தரம். இந்த கொலைக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதால் ரெண்டு பேரையுமே ஆன் தி ஸ்பாட் போலீஸ் கைது செய்து புழலில் அடைத்தனர். மீனாட்சி சுந்தரம் இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் ஆவார். வயசு 60 ஆகிறது. தமிழ்செல்விக்கு சொந்தக்காரர்.. குழந்தை இவரை எப்பவுமே தாத்தான்னு கூப்பிட்டுக்கிட்டு ஓடிவருவாளாம்.

பரபரப்பு
அது மட்டுமில்லை, இவர் அந்த ஏரியாவில் வேறு சில பெண்களிடமும் எக்குத்தப்பாக நிறைய முறை நடந்துகொண்டுள்ளார் என்றும் தெரியவந்தது. இந்நிலையில், ஷன்மதியின் அப்பா கண்ணீருடன் கமிஷனர் ஆபிசுக்கு வந்ததால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

உறுதி
குழந்தையை பறிகொடுத்து தவிக்கும் தங்களை முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் குறிப்பாக அவரது மகன் தங்களை மிரட்டுவதாக புகார் சொல்லி உள்ளார். இது சம்பந்தமான புகார் மனுவை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து அளித்துள்ளார். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை
அப்போது ஷன்மதி கொலை வழக்கில் உடற்கூறாய்வு அறிக்கை, தடயவியல் அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக போலீசார் சொல்கிறார்கள். இருந்தாலும் உரிய தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடமாட்டோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் போலீசார்!
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications