கோயம்பேட்டில் பாட்டியை பார்க்க சென்ற 4 வயது சிறுவன்! 6வது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்த சோகம்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்த நான்கரை வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திநகர் அபிபுல்லா சாலை 3ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் திலீப் (38). இவரது மனைவி சுவாதி. இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். வேலூரில் இருந்து சுவாதியின் பெற்றோர் நேற்று சென்னை வந்திருந்தனர்.

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் விக்டோரியா அடுக்குமாடி குடியிருப்பில்தான் சுவாதியின் பெற்றோர் தங்கியிருந்தனர். அவர்களை பார்க்க சுவாதி மகன், மகளை அழைத்துச் சென்றார். அங்கு பெற்றோரிடம் சுவாதி பேசிக் கொண்டிருந்த போது சிறுவன் துருவன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென அலறல் சப்தம் கேட்டது. உடனே சுவாதி உள்ளிட்டோர் போய் ஜன்னல் வழியாக பார்த்த போது துருவன் கீழே விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்து ஓடி போய் பார்த்த போது சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உடனே அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்: கடந்த பிப்ரவரி மாதம் தருமபுரி மாவட்டம் எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த வினோத்குமார். இவரது மகன் ஆகாஷ் (6). இவர் இண்டூரில் உள்ள இவரது உறுவினர் வீட்டில் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது கால் தவறி கீழே இரும்பு கேட்டில் விழுந்துள்ளார்.
அவரை மீட்டு தருமபுரி மருத்துவமனையில் சேர்த்த போது ஆகாஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இன்னொரு சம்பவம்: தாம்பரம் அருகே திருவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. தம்பதியின் மகன் தீனா (6), வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குமார், வீட்டின் அருகிலுள்ள கடைக்கு புறப்பட்டுள்ளார். இதை, சிறுவன் தீனா முதல் மாடியிலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளான்.
அப்பாவுடனேயே செல்ல வேண்டி, சிறுவன் முயன்ற போது திடீரென முதல் மாடியிலிருந்து நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளான். இதனால் சப்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு எழும்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications