40 வருஷம் சமைச்சு போட்டாங்களே! ராஜம்மாள் உடல் பின்னாடியே நடந்து வந்து.. உடைந்து அழுத சசிகலா! கலக்கம்
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாளின் உடலுக்கு சசிகலா நேற்று இரவு அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் வேலை பார்த்து வந்தவர் ராஜம்மாள். ஜெயலலிதாவின் தனிப்பட்ட சமையல் காரராக இவர் பணிபுரிந்து வந்தார். போயஸ் கார்டன் வீட்டில் இவர் ஜெயலலிதாவிற்கு சமையல் செய்து வந்த நிலையில் அங்கேயே இவர் பல நாட்கள் தங்கி இருந்ததும் வழக்கம்.
ஜெயலலிதா இவரிடம் மிகவும் அன்பாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் ராஜம்மாள் சசிகலாவிற்கும் நெருக்கம் ஆனார்.

சசிகலா
சசிகலா போயஸ் கார்டனில் இருக்கின்ற சமயங்களில் எல்லாம் அவருக்கு விருப்பமான உணவுகளையும் இவர் சமைத்து கொடுத்து இருக்கிறார். சசிகலாவிடமும், இளவரசியிடமும் கூட இவர் நட்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் உடல்நலக்குறைவால் ராஜம்மாள் நேற்று காலமானார். கோபாலபுரத்தில் மருத்துவமனை ஒன்றில் உடலநலக்குறைவால் இவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஜெயலலிதா ராஜம்மாள்
ஆனால் இவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. அதோடு இவருக்கு வயது 80 என்பதால் உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் ராஜம்மாள் காலமானார். முன்னதாக ராஜம்மாள் மருத்துவமனையில் இருக்கும் செய்தி கேட்டு அவரை சசிகலா நேரில் வந்து பார்த்தார். அதன்பின் ராஜம்மாள் மரணத்தை தொடர்ந்து சசிகலா அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ராஜம்மாள் சசிகலா
வீட்டில் உடல் வைக்கப்பட்டு இருந்த நிலையில் சசிகலா, இளவரசி அங்கே சில நிமிடங்கள் நின்று கண்ணீர் விட்டனர். அப்போது ராஜம்மாள் உறவினர்களிடம், ரொம்ப நல்லா சமைப்பாங்க.. 40 வருஷத்துக்கு மேலே எங்க கூடவே இருந்தாங்க என்று கண்ணீர் விட்டார். சசிகலா, ஜெயலலிதா ஆகியோரிடம் போயஸ் கார்டனில் நெருக்கமாக இருந்தவர்களில் ராஜம்மாள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவரின் மறைவு சசிகலாவை கண்ணீர்விட வைத்தது.

சசிகலா ஜெயலலிதா
அதுமட்டுமின்றி நேற்று இவரின் உடல் இறுதி சடங்கிற்காக எடுத்து செல்லப்பட்டது. அப்போது வெளியே வேன் வரை ராஜம்மாள் உடலை பின் தொடர்ந்து சசிகலா கண்ணீர்விட்டபடி வந்தார். சசிகலா இப்படி கண்ணீர்விட்டபடி நடந்து வந்தது அங்கிருந்த ராஜம்மாள் உறவினர்களை கலங்க வைத்தது. இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் இரண்டாம் மகன் ஜெய பிரதீப் ராஜம்மாள் உடலுக்கு நேற்று தனியாக மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications