தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு- இன்று 2 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 2 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு 2 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக இன்று ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
Recommended Video
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 46 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 1,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications