சண்டே ஜாலியா வெளியே போறீங்களா? லோக்கல் ட்ரைன்ல போகாதீங்க.. 44 மின்சார ரயில்கள் ரத்து! முழு விவரம்
சென்னை: தண்டவாள பராமரிப்பு மற்றும் இன்ஜினியரிங் பணிகள் காரணமாக சென்னையில் இன்று 44 புறநகர் ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு எந்த அளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு புறநகர் ரயில்களுக்கும் பங்கு இருக்கிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1930ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ரயில்கள் 4 பிரதானமான வழித்தடங்களில் 6 இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் இன்ஜினியரிங் பணிகள் காரணமாக 44 புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு காலை 10.30, 10.40, 10.50, 11.00, 11.10, 11.20, 11:30, 11.40, 11.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்களும், மதியம் 12 மணி, 12.10, 12.20, 12.30, 12.50, 1.00, 1.15, 1.30, 1.45, 2.00, 2.15, 2.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 10.05 மணி தொடங்கி, 10:15, 10:25, 10:45, 10.55, 11.25, 11.35 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்களும், மதியம் 12.00 மணி தொடங்கி, 12:15, 12.45, 1.30, 1.45, 2.15 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்களும், மாலை 4.30 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு காலை 9.40, 10.55, 11.30, மதியம் 1 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும், காலை 9:30 மணிக்கு காஞ்சிபுரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும், 11.05 மணிக்கு திருமால்பூர்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் என மொத்தம் 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், பயணிகள் வசதிக்காக தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மதியம் 11:55, 12.45, 3.25, 3.45, 2:20, 2.25 ஆகிய நேரங்களிலும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9:30, 9:40, 10.59, 11.05, 11.30 மதியம் 12.00, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications