காணாமல் போகும் 460 கிராம பஞ்சாயத்துகள்.. இன்னும் சில மாதங்கள் தான்.. தமிழ்நாடே மொத்தமா மாறுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஊராட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் 460 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஊராட்சிகளின் பதவிக் காலம் முடிந்தவுடன் இந்த இணைப்பு அமலுக்கு வரும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாநகராட்சிகளுடன் நான்கு புதிய நகராட்சிகள், ஏழு புதிய பேரூராட்சிகள் மற்றும் 236 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல நகராட்சிகளுடன் 13 புதிய பேரூராட்சிகள், 196 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

chennai corporation tn government

நகராட்சிகள் விரிவாக்கம்: மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள நகராட்சிகளில் 24 பேரூராட்சிகள், 24 ஊராட்சிகள், இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள மாநகராட்சிகளில் தலா ஒரு நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் நான்கு ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் ஐந்து புதிய நகராட்சிகள் 45 பேரூராட்சிகள் 460 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி மாநகராட்சிகளில் 2 பேரூராட்சிகள் 46 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி விரிவாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் 18 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 11 ஊராட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சியில் 16 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் மூன்று நகராட்சிகள் 19 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 6 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் கரூர் மாநகராட்சியில் 6 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சியில் 10 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மதுரை, கோயம்புத்தூர்: மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சியில் 13 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் 13 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புதூர் மாநகராட்சியில் ஒரு நகராட்சி நான்கு பேரூராட்சிகள் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சியில் 7 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் சேலம் மாநகராட்சியில் இரண்டு பேரூராட்சிகள் 5 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சியில் 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

திருச்சி, நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சியில் 7 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 38 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சியில் 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

நகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள ஊராட்சிகள்: மேலும் அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சியில் ஆறு ஊராட்சிகளும் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சியில் 15 ஊராட்சிகளும், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சியில் இரண்டு புதிய ஊராட்சிகளும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் இரண்டு ஊராட்சிகளும் இணைக்கப்பட்டு உள்ளன.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் இரண்டு ஊராட்சிகள் மற்றும் சங்கரன்கோவில் நகராட்சியில் ஒரு ஊராட்சியும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் 7 ஊராட்சிகளும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி நகராட்சியில் இரண்டு ஊராட்சிகளும் லால்குடி நகராட்சியில் மூன்று ஊராட்சிகளும் துறையூர் நகராட்சியில் 7 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+