தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்.. ஒரே நாளில் 47 தமிழக மீனவர்களை கைது செய்து அட்டூழியம்
சென்னை: தமிழக மீனவர்கள் 47 பேரை நேற்று ஒரே நாளில் இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கைது செய்துள்ளது. தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்த 30 மீனவர்களை நேற்று இரவும், நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 17 தமிழக மீனவர்களை இன்று அதிகாலையிலும் கைது செய்தது இலங்கை கடற்படை.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. அடிக்கடி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது. தொடர்ந்து அத்துமீறலில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 47 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
நேற்று இரவு தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே 30 தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் அனைவரையும் கைது செய்தது. இதேபோல் இன்று அதிகாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 17 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாம், காங்கேசன் கடற்படை முகாம்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஒரே நாளில் 47 மீன்வர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications