NEET: 2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கவுன்சிலிங்கில் அதிக வாய்ப்பு! வெளியான டேட்டா
சென்னை: நீட் தேர்வை 2 முறைக்கு மேல் எழுதியவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசையில், 2 முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய 48,954 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முதல் முறையாக நீட் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 23,240 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 5 முறைக்கு மேல் நீட் எழுதியவர்கள் 573 பேர் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

கவுன்சிலிங் - தரவரிசை
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் உள்ள 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, 11,063 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில், 2025 - 26 ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கு, 72,473 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்த, 25 பேர் கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தகுதி பெற்ற, 72,194 மாணவர்களின் தரவரிசை பட்டியலை, சென்னையில் நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.
தரவரிசை டாப் லிஸ்ட்
அரசு ஒதுக்கீட்டில் நீட் தேர்வில், 665 மதிப்பெண் பெற்ற திருநெல்வேலியை சேர்ந்த சூர்யநாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல, நீட் தேர்வில் 655 மதிப்பெண் பெற்ற சேலத்தை சேர்ந்த அபினீத் நாகராஜ், 653 மதிப்பெண் பெற்ற திருப்பூரை சேர்ந்த ஹிருத்திக் விஜயராஜா ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். இதில், முதல் 10 இடங்களில், ஒன்பது இடங்களை மாணவர்களே பிடித்துள்ளனர்.
7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில், நீட் தேர்வில் 572 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த திருமூர்த்தி; 563 மதிப்பெண் பெற்ற கிருஷ்ணகிரியை சேர்ந்த சதீஷ்குமார், 551 மதிப்பெண் பெற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த மதுமிதா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
2 முறைக்கு மேல் எழுதியவர்கள்
மேலும், கடந்த ஆண்டுகளில், நீட் தேர்வு எழுதி மதிப்பெண் குறைவால் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காமல் போனவர்கள், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினர். அதன்படி, இரு முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய, 48,954 மாணவர்கள் இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
முதல் முறையாக தேர்வு எழுதியவர்களில் 7.5% உள் ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட மொத்தம் 23,240 பேருக்கு தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2 முறை தேர்வு எழுதியவர்களில் 27,825 பேர், மூன்று முறை தேர்வு எழுதியவர்களில் 14,636 பேர், 4 முறை நீட் தேர்வு எழுதியவர்களில் 4,715 பேர் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 5 முறைக்கு மேல் நீட் எழுதியவர்கள் 573 பேர் தரவரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படித்து தேர்வானவர்களிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற நீட் தேர்வை 2, 3 முறைகள் எழுத வேண்டியுள்ளது. நீட் என்பது ஏழை மாணவர்களுக்கான தடை என்பது நிரூபணம் ஆகியுள்ளது என சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளன.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications