Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிணை இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன்! மத்திய அரசின் முத்ரா திட்டம்! சைலண்டாக சம்பவம் செய்த தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், இதுவரை 49.5 கோடி பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அதிகம் பயன்பெற்ற மாநிலங்களின் லிஸ்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த திடத்தின் கீழ் அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்குகிறது. அந்தவகையில், கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம்.

mudra loan scheme central government tamil nadu

இந்த கடனை பெறுவதற்கு எந்தவித ஜாமீன் உத்தரவாதமும் தேவையில்லை. சிறு குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்றன. 3 வகைகளில், இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படுகிறது.

அதாவது, "சிஷு" (Shishu) என்ற திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரையில் கடன் வழங்கப்படும். "கிஷோர்" என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது. "தருண்" என்ற திட்டத்தின் கீழ், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 8 ஆண்டுகளை கடந்து 9-வது ஆண்டாக இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முத்ரா திட்டத்தின் மூலம் கடன் உதவி பெற்ற தொழில் முனைவோர் பலர் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டு இருக்கிறார்கள். சிறிய வியாபாரம் செய்பவர்கள் பலரும் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளனர். கடந்த 6 ஆம் தேதி வெளியான தரவுகளின் படி, நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 49 கோடியே 55 லட்சம் பேர் கடன் உதவி பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் கடனாக அளிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எதுவென்றால், இந்த முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். அதாவது இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 5 கோடியே 62 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியாக அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகம் தான் இந்த திட்டத்தில் அதிகம் பயன்பெற்ற மாநிலங்களில் டாப் ஆக உள்ளது.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக பீகாரில் 5 கோடியே 56 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். 3-வது இடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் 4 கோடியே 88 லட்சம் பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். 4-வது இடத்தில் மேற்குவங்கம் உள்ளது. இந்த மாநிலத்தில் 4 கோடியே 83 லட்சம் பேரும் கடன் உதவி பெற்றுள்ளனர். இந்த திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டை விட தற்போது, கடன் உதவி பெறுவோர் எண்ணிக்கையும் கடன் தொகையும் பல மடங்களாக அதிகரித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற எந்த ஜாமீனும் தேவையில்லை. பொதுவான சில தகவல்களையும் , அது தொடர்பான ஆவணங்களையும் இணைத்து கொடுத்தால் போதும்.. குறிப்பாக, தொழில் திட்ட அறிக்கைகள், வருமான கணிப்புகள் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கேட்கும். விவசாயம், உள்ளிட்டதொழிலுக்கு இந்த முத்ரா கடன் கிடைக்காது.

புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழில்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி கடன் வழங்கும் நிறுவனங்களால் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+