Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வர்றியா".. சரிதாவின் சிரிப்பில் கவிழ்ந்த 5 ஆண்கள்..அதுவும் அந்த மெசேஜ்.. மொத்த மானம் கப்பலேறிடுச்சே

5பேரை திருமணம் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்களிடம் பெண்கள் ஏமாந்து கொண்டிருந்தது போய், பெண்களிடம் அப்பாவி ஆண்கள் ஏமாறும் பரிதாபம் தொடங்கி உள்ளது.. இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த கவலையையும், பெண்கள் மீதான மதிப்பையும் சீர்குலைக்க தொடங்கியும் விட்டது.. இதோ ஒரே பெண்ணிடம் ஏமாந்த 5 அப்பிராணிகளை பாருங்கள்..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது தாசப்பகவுண்டர் புதூர்... இந்த பகுதியை சேர்ந்தவர் சரவணன்.. 35 வயதாகிறது.. கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து, பெண் பார்க்க தொடங்கினர்... 35 வயதாகிவிட்டதால் உடனே பெண் கிடைக்கவில்லை.. அதனால், 8 புரோக்கர்களை தேடி பிடித்து அவர்கள் மூலம் பெண் பார்க்க தொடங்கினர்.

 ப்ரோக்கர்கள்

ப்ரோக்கர்கள்

புளியம்பட்டி பரிசாபாளையத்தை சேர்ந்த மலர், அந்தியூரை சேர்ந்த மற்றொரு பெண், கோபியை சேர்ந்த தங்கமணி, திண்டுக்கல்லை சேர்ந்த முத்துக்காளை, சாத்தூரை சேர்ந்த முத்து, விருதுநகர் மாவட்டம் சூளைக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி, கவுந்தப்பாடியை சேர்ந்த பாப்பாள், ஈரோட்டை சேர்ந்த சரவணன் ஆகியோர்தான் அந்த 8 புரோக்கர்கள்.. 8 பேருமே சேர்ந்து சரவணனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்... கடைசியில் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் சரிதா என்ற பெண் இருப்பதாக கூறினார்கள்.. சரிதாவுக்கு 27 வயதாகிறது.

 பரிதாப சரவணன்

பரிதாப சரவணன்

இவரை சரவணனுக்கு பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் பார்க்கும்போது சரவணனுக்கு சரிதாவை ரொம்பவே பிடித்து போனது... முக்கியமாக சரிதாவின் கள்ளங்கபடமில்லாத சிரிப்பு சரவணனை ஈர்த்துவிட்டது.. அவரது குடும்பப் பின்னணி குறித்து கேட்டபோது, சரிதாவுக்கு தாய், தகப்பன் இல்லை என்பதும், ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான்.. ஆனால் அவரும் திருமணமாகி கேரளாவில் வசிப்பதாகவும் சொன்னார்கள்.. அதனால் தனிநபரான சரிதா, பேப்பர் கோன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து சுயமாக சம்பாதிப்பதாகவும், ஈரோட்டில் உள்ள ஒரு மகளிர் ஹாஸ்டலில் தங்கி இருப்பதாகவும், பெரியம்மாள் விஜயலட்சுமி என்பவர் மட்டும் சரிதாவுக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் சொன்னார்கள்.

 கமிஷன்கள்

கமிஷன்கள்

ஏழை பெண் என்பதால் சரிதா மீது மனம் இறங்கினார் சரவணன்.. சுயமாக சம்பாதிப்பதால், பெருமையாக நினைத்தார் சரவணன்.. ஆதரவற்ற பெண் என்பதால், அடைக்கலம் தர நினைத்தார் சரவணன்.. இறுதியில் சரிதாவை மணக்க சம்மதம் சொல்லி, கடந்த 20.8.2022 அன்று சரவணனின் சொந்த ஊரிலேயே திருமணமும் நடந்தது.. அந்த 8 புரோக்கர்களுமே கல்யாணத்தில் கலந்து கொண்டார்கள்.. 8 பேருக்கும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கமிஷனாக கொடுத்தார் சரவணன்.. குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கினார்.. அளவு கடந்த பிரியத்தை சரிதா மீது காட்ட தொடங்கினார்.. அம்மா, அப்பா இல்லாத பெண் என்பதால், பாசத்தை கொட்டியதுடன், அவர் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தார்.

 வாய்ஸ் மெசேஜ்

வாய்ஸ் மெசேஜ்

சில வாரங்கள் ஓடியது.. ஒருநாள் சரிதாவின் செல்போனை ஏதேச்சையாக சரவணன் பார்த்தார்... அப்போது வாட்ஸ்அப்பில் சரிதா அவரது பெரியம்மாள் விஜயலட்சுமிக்கு 2 வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதைப்பார்த்த சரவணன், பெரியம்மாவிடம் போனில் பேசாமல், எதுக்காக வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று சந்தேகம் வந்தது.. அதனால் அந்த வாய்ஸ் மெசேஜில் என்ன உள்ளது என பார்த்தார்.. "இங்கே வீட்டில் எல்லோரும் இருக்கிறாங்க, என்னால் ஃப்ரீயா பேச முடியாது... நான் இந்த வாரம் ஊருக்கு போகணும்.. ஆஸ்பத்திரிக்கு போகனும்... நீ ஏதாவது பொய் சொல்லு. குத்து மதிப்பாக ஏதாவது பொய் சொல்லு. இங்க இருந்துட்டு 10 பைசா என்னால மிச்சம் பண்ண முடியாது" என்று ஏதேதோ அதில் பேசியுள்ளார்.

 ஃப்ரீயா இல்லை

ஃப்ரீயா இல்லை

இன்னொரு ஆடியோவில், "என்னால முன்னாடி மாதிரி பேச முடியாது.. இங்கே நிலைமை வேற.. எல்லாருமே கூட இருக்காங்க.. அதனால், இந்த வாரம் நீயா வந்து என்னை அழைச்சுட்டு போகிற மாதிரி வந்துடு.. ஊருக்கு போயிட்டு, குழந்தைகளை பார்த்துட்டு வந்துடறேன்... வேறு ஏதாவது கனெக்‌ஷன் இருக்கானு பாரு... ஆனால், அவன் கிறுக்கனா இருக்கனும்... ஒரு வாரத்துல போயிட்டு ரிட்டர்ன் இங்க வரனும். வேறு ஏதாவது ஆள் எனக்கு கல்யாணத்துக்கு இருந்தா பாரு. வயசான ஆளா பாரு. இங்கே இருக்கிற மாதிரி விவரமான ஆளு வேண்டாம்... வயசு அதிகமாக இருக்கிற மாதிரி, போனால் இரண்டு நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு. நான் ஈரோடு போயி வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை இருக்கு. எல்லோரும் வீட்டில் இருப்பதால் ஃப்ரியா பேச முடியலை. வந்து அழைச்சுட்டு போ, ஓடி போயிட மாட்டேன். நான் ஓடி போனா இந்த பையன் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்கும்.. என் மேல ரொம்ப பாசமா வேற இருக்கான்.. அதுவும் ஒரு பயமா இருக்கு" என்று சரிதா பேசியிருந்தார்.

 சரிதாவின் சிரிப்பு

சரிதாவின் சிரிப்பு

இதை கேட்டதும் சரவணனுக்கு தூக்கி வாரிப்போட்டது.. உயிருக்கு உயிராக நேசித்த மனைவியின் சதி திட்டமும், அவரது மோசடி கும்பலையும் நினைத்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.. ஒரு வாரம் இதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.. சரிதாவிடமும் இதை பற்றி எதுவும் கேட்கவில்லை.. ஆனால், சரவணனின் நெருங்கிய நண்பர்கள், "ஏன் இப்படி இடிந்து போயிருக்கிறாய்" என்று துருவி துருவி கேட்கவும், நடந்தவற்றை சொல்லி உள்ளார்.. அதிர்ச்சி அடைந்த நண்பர்களும் சரவணனுக்கு ஆறுதல் சொல்லியதுடன், இந்த மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர்... அதன்படி, தனது நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும், உனது பெரியம்மாளை பார்க்க சொல்லேன் என்று சரவணன் சரிதாவிடம் எதுவும் தெரியாதது போல் கூறினார்.

பெரியம்மா

பெரியம்மா

சரிதாவும் பெரியம்மாவிடம் சொல்லி ஒரு பெண்ணின் போட்டோவை காட்டினார்.. நண்பருக்கு பெண் பிடித்து விட்டது. மணப்பெண்ணை அழைத்து வந்தால் எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று சரவணன் சொன்னார்.. அதன்படி ரூ.80 ஆயிரம் கமிஷன் பேசப்பட்டது. இதனை அடுத்து சரிதாவின் பெரியம்மாள் ஒரு காரில் ஒரு பெண்ணை தாசப்பன்கவுண்டன் புதூருக்கு அழைத்து வந்தார்... அப்போது அங்கே நண்பர்களுடன் சேர்ந்து சரவணன் அந்த கும்பலை மடக்கி பிடித்தார்... இதனால் விஜயலட்சுமி, சரிதா மற்றும் விஜயலட்சுமியுடன் வந்த பெண் ஆகிய 3 பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 8 பேர் 8 கமிஷன்

8 பேர் 8 கமிஷன்

நண்பனுக்கு திருமணம் செய்ய அழைத்து வந்த பெண்ணின் பெயர் விஜயா.. 36 வயதாகிறது.. அவருக்கு திருமணமும் ஆகிவிட்டது.. சரிதா + விஜயா + பெரியம்மா = இவர்கள் 3 பேருக்கும் இதுதான் வேலையாம்.. திருமணம் ஆகாத நபர்கள், மனைவியை இழந்த வயதானவர்களை குறி வைத்து பணத்தை கறந்து வருகின்றனர்.. இதற்கு 8 புரோக்கர்களும் உடந்தை.. இவர்கள் மொத்தமாக கமிஷன் பணத்தை பங்குபோட்டு கொள்வார்களாம்.. இதனையடுத்து மோசடி கும்பல் குறித்து சரவணன் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 தலையில் இடி

தலையில் இடி

சரவணன் தலையில் விழுந்த முதல் இடி சரிதா பற்றிய விஷயங்கள்தான்.. சரிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. அவர் ஒரு லாரில டிரைவர்.. இரண்டரை லட்சம் பறித்து கொண்டு ஓடிவந்துவிட்டார் சரிதா.. இப்படி மொத்தம் 4 பேரை திருமணம் செய்துள்ளார் சரிதா.. 5வதாக வாக்கப்பட்டவர்தான் சரவணன்.. நண்பரை திருமணம் செய்து கொள்ள ரெடியாகி வந்தாரே விஜயா.. அவருக்கு 21 வயதில் ஒரு மகளும், 19 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்களாம்..

 அன்பு + ஏழ்மை

அன்பு + ஏழ்மை

இப்போது மொத்த பேரையும் சத்தியமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்க போகிறார்கள்.. இனிமேல்தான் இவர்களின் வண்டவாளம் தெரியவரும்.. பார்த்ததுமே கிறங்கி விழக்கூடிய கவர்ச்சியோ, ஆடம்பரமோ இல்லாத எளிமையான தோற்றத்தை கொண்டவர்தான் சரிதா.. ஏழ்மை பின்னணியும், எளிமையும், ஆதரவற்ற நிலைமையையும் கண்டு இதுவரை 5 ஆண்கள் ஏமாந்துள்ளனர் பாவம்.. ஆனால், அன்புக்கா ஏங்குபவர்களுக்குதான் அதிகமாகவே வலி கிடைக்கிறது போலும்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+