தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா.. இதுவரை 3.43 லட்சம் பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுகுறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தினமும் 5000 முதல் 6000 வரை பரவி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இன்று புதிதாக 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 5,870 பேருக்கும் வெளிநாடு, உள்நாட்டு விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என 20 பேருக்கும் சேர்த்து 5,890 பேர் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மொத்த எண்ணிக்கை
இன்று 67,532 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 37,78,778 பேரின் சளி மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டன. இதுவரை 65,643 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அது போல் இதுவரை 36,47,582 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு
இன்று தமிழகத்தில் 3,670 ஆண்களுக்கும், 2,220 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2.07 லட்சம் ஆண்களுக்கும், 1.36 லட்சம் பெண்களுக்கும் 29 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 136 பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா
இன்று மட்டும் 5,667 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,83,937 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். இன்று கொரோனாவால் 120 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5,886 ஆக உள்ளது.

சென்னையில் எத்தனை பேர்
சென்னையில் இன்று 1185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,17,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடலூரில் 390 பேருக்கும், செங்கல்பட்டில் 224 பேருக்கும், குமரியில் 209 பேருக்கும் சேலத்தில் 268 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications