5 ஏக்கர் நிலம்.. விவசாயிகளுக்கு மானியம்.. வேளாண் கருவிகளுக்கு இ-வாடகை இருக்கே? அப்ளை பண்ணுவது எப்படி
சென்னை: தமிழகத்தில் விவசாயிகளின் நன்மைக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்தவகையில், வேளாண் இயந்திரங்களுக்கு அரசு தரப்பில் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த மானியத்தை பெற விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இ-வாடகையில் வேளாண் கருவிகளை எப்படி பெறுவது தெரியுமா? இவைகளை பற்றிதான் சுருக்கமாக இங்கே பார்க்க போகிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரை, வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.. இதுபோன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. முக்கியமாக விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு, பல்வேறு அறிவிப்புகள், சலுகைகளை அறிவித்து வருகிறது.

அந்தவகையில், வேளாண் கருவிகளை சொந்தமாக வைத்திருக்க முடியாத விவசாயிகளுக்கு குறைந்த விலையில், அந்த கருவிகளை அரசே வழங்குகிறது. இதற்கு இ-வாடகை திட்டம் என்று பெயர்.
அமைச்சர் தந்த சர்ப்ரைஸ்
சமீபத்தில் நடந்த சட்டசபையில், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தபோது, வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ், வேளாண் இயந்திரங்கள், கருவிகள் 17 ஆயிரம் உழவர்களுக்கு ரூ.215.80 கோடி மானியத்தில் வழங்கப்படும். வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கீடு என்று அறிவித்திருந்தார்.
அதேபோல, இ-வாடகை ஆன்லைன் செயலி மூலமாக உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்திட டிராக்டர் உள்ளிட்ட 603 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும். 1,000 உழவர்கள் பயனடையும் வகையில் தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் ரூ.24 கோடி செலவில் அமைத்துத் தரப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார்.
வாடகை கருவிகள் என்னென்ன
அந்தவகையில் விவசாயிகளுக்கு பெருத்த நன்மையை இந்த இ-வாடகை திட்டம் தந்துவருகிறது.. குறிப்பாக, மண் தள்ளும் இயந்திரம், டிராக்டர், மினி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் என கிட்டத்தட்ட 697 நில மேம்பாட்டு இயந்திரங்களை வாடகைக்கு பெற முடியும்.
101 சிறுபாசனத் திட்டக் கருவிகளும், உளிக்கலப்பை, ரோட்டவேட்டர், கொத்துக் கலப்பை, விதை விதைக்கும் கருவி, களையெடுக்கும் கருவி, என 40 வகையான 1,885 டிராக்டரால் இயங்கக்கூடிய வேளாண் கருவிகளும், , டிராக்டருடன் குறைந்த வாடகையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
இந்த இயந்திரங்களை, விவசாயிகள் ஆன்லைனிலேயே பதிவுசெய்து பெற்று கொள்ள, "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.. இதில், முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
5 ஏக்கர் நிலம்
இயந்திரங்களை வாடகைக்கு பெற்று, பணிகளும் முடிந்தவடைந்ததும், விவசாயி செலுத்திய மொத்த வாடகைத் தொகையில், 50 சதவீதத் தொகை, பின்னேற்பு மானியமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.. ஒரு விவசாயிக்கு 5 மணி நேரம் அல்லது 5 ஏக்கர் போன்றவற்றில் வாடகையில், எது குறைவோ, அந்த வாடகை மானியமாக வழங்கப்படும்.
அதிகபட்சம் எவ்வளவு: நன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 2.5 ஏக்கருக்கு 625 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மானியம் வழங்கப்படும்.
புன்செய் நிலமுடைய சிறு, குறு விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு 250 ரூபாய் வீதம், அதிகபட்சமாக ஐந்து ஏக்கருக்கு 1,250 ரூபாய் வரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மானியம் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள்
'உழவன் செயலியில்' இ-வாடகை சேவை மூலம் அல்லது evaadagai என்ற வெப்சைட்டில், சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் உள்ளிட்ட விவரத்தை பதிவிட்டு, விண்ணப்பிக்க வேண்டும், இதற்கு நிலத்தின் சிட்டா, புல வரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், ஆதார் அட்டையின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.












Click it and Unblock the Notifications