சென்னையில் 5 கோடி சொத்து . மருமகளுக்கு விபூதி அடித்த மாமனார்.. விஷயமே வேற!
சென்னை: மகனுக்கு திருமணமாகவில்லை என போலி சான்று தயாரித்திருக்கிறார் அப்பா. அதன் மூலம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த நிலையில், மருமகள் இதுகுறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாமனாரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நில அபகரிப்பு புகார்கள் சென்னையில் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக வருகிறது. வித்தியாசமான முறையில் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள். ஆதார் கார்டு வேண்டும். நேரில் வர வேண்டும்.கையெழுத்து அல்லது கைரேகை வைக்க வேண்டும், விதவை சான்றிதழ் வேண்டும், வாரிசு சான்றிதழ் வேண்டும் என பல கட்டுப்பாடுகள் பத்திரங்கள் பதிவதற்கு இருக்கிறது. அதையும் மீறி மோசடிகள் அரங்கேறி வருகிறது. அப்படி மோசடியை உறவினர்களே சிலர் நேரம் மேற்கொள்கிறார்கள். அப்படி ஒரு மோசடி குறித்து தான் பார்க்க போகிறோம்.

சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த பெண் பாரதி. இவருக்கு 45 வயதாகிறது. பாரதி அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று நில அபகரிப்பு புகார் ஒன்றை அளித்தார்.
5கோடி மதிப்புள்ள நிலம்: அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது: என் பெயர் பாரதி, எனக்கு 45 வயது ஆகிறது. என்னுடைய கணவர் விஜயகுமார். என் கணவர் 2007-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் என் கணவர் விஜயகுமார் பெயரில் சென்னை பெரவள்ளூரில் ரூ.5 கோடி மதிப்பில் நிலத்துடன் கூடிய வீடு இருக்கிறது.
வாரிசு சான்றிதழ்: இந்நிலையில், எனது மாமனாரும் விஜயகுமாரின் தந்தையுமான செங்கோடன் (வயது 71) மாதவரத்தில் வசிக்கிறார். என் கணவர் விஜயகுமார் இறந்து போன நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்தை மோசடி செய்து அபகரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜயகுமாருக்கு திருமணம் ஆனதை மறைந்து, அதாவது திருமணம் ஆகவில்லை என்று கூறி, போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து, போலியான ஆவணங்கள் பதிவு செய்து, 5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்து ஆதாயம் அடைந்துள்ளார். எனவே, அவர் மீதும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியிருந்தார்.
மாமனார் கைது: இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், பாரதி அவரது மாமனார் குறித்து தெரிவித்திருந்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பாரதியின் மாமனார் செங்கோடன், அவரது கூட்டாளி கானாத்தூர் லோகநாதன் (51) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தார்கள். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
அரக்கோணத்தில் தென்னந்தோப்புடன் நிலம்.. ஆவடியில் 55 லட்சம் இழந்த ராணுவ வீரர்.. என்ன நடந்தது? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications